Thursday, February 25, 2016

செங்கொடிவேலி


இது கற்ப மருந்து வாத பித்த கபத்தினால் ஏற்படும் கட்டி கழலை புண்புறை புற்று இவைகளை குணமாக்கும் வரை இதன் வேரை அரைத்து பசுமாட்டின் கொம்பில் தடவ பாலானது குருதியாக சுரக்கும்

அரிப்பு, படை நீங்க நெட்டிலிங்கம்:



வெயில் காலத்தில் உடலில் அரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே காரணம்.

 பூஞ்சைக்கிருமிகளுக்கு ஈரம் மிகவும் பிடித்த விஷயம். அதுவும் துர்நாற்றத்துடன் தோலின் கொழுப்பு கழிவு கலந்து வியர்வையாக வெளியேறும் மனிதத்தோலை இவை பற்றிக்கொண்டு தங்கள் இனத்தைப் பெருக்கி வெகு விரைவாக இனவிருத்தி செய்து வளர ஆரம்பித்துவிடும். பூஞ்சையின் ஒவ்வாமையால் தோலில் தோன்றும் அரிப்பை கட்டுப்படுத்த நாம் சொறிவதால் தோலில் சிறிய ரத்தக்காயங்கள் உண்டாகி, ரத்தத்தில் பூஞ்சை கிருமிகள் செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.

பூஞ்சை கிருமிகளை அழிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிகவும் சிரமமானதுதான். ஏனெனில் ஒருவரிடம் இருந்து அந்த கிருமிகள் அழிவதற்கு முன் குறைந்தது 10 பேருக்காவது தங்கள் இனவிருத்திகளை பரிமாற்றம் செய்துகொண்டுதான் மறைகின்றன. ஆகவேதான் பூஞ்சையால் தோன்றும் கிருமித்தொற்று வீட்டில் ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் பரவுகிறது. விடுதியில் படிப்பவர்கள், பழைய, சுத்தமில்லாத ஈரத்துணியை அணிபவர்கள், நீண்டநேரம் உள்ளாடைகளை மாற்றாமல் அணிபவர்கள், ஒரே உடையை மாற்றிப் போடுபவர்கள், பிறரின் அழுக்குத் துணியையும் சேர்த்து ஒன்றாக துவைத்து பயன்படுத்துபவர்கள் என பலதரப்பட்டோருக்கு பூஞ்சை கிருமிகளின் தொற்று உண்டாகிறது. வெளியில்காலத்தில் இது அதிகப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், அதிக அசைவ உணவு உண்பவர்கள் பூஞ்சை கிருமியின் பாதிப்புக்கு அடிக்கடி ஆளாகிறார்கள்.

பூஞ்சை கிருமியின் தொற்றை தவிர்க்க விரும்புபவர்கள் உடம்பை நன்கு சுத்தமாக தேய்த்து குளிக்க வேண்டும். கழுத்து, பிடறி, அக்குள், தொடையிடுக்கு பகுதிகளில் நன்கு தேய்த்து சுத்தம் செய்வதுடன் உலர்ந்த துண்டால் ஈரம் தங்காமல் துடைக்க வேண்டும். வெயில்காலத்தில் காலை மற்றும் மாலையில் தனித்தனி ஆடைகளை அணியவேண்டும். படை உள்ளவர்களின் உடைகளை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும். பூஞ்சை கிருமியால் தோன்றும் தொற்றானது படை, படையாக பரவுவதால் பரவுவதற்கு முன்பே சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும். நமக்கு நன்கு அறிமுகமான நெட்டிலிங்க மரத்தின் இலை மற்றும் பட்டை பூஞ்சைக்கிருமிகளை அழித்து படையினால் தோன்றும் புண்களை ஆற்றும்.

நெட்டிலிங்க இலைகளை மைய அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றிய அரிப்புள்ள இடங்களில் தடவிவர படை நீங்கும். இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட வயிற்றுக்கிருமிகள் வெளியேறும். ஆனால் குறைந்தளவே சாப்பிட வேண்டும். பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அதனைக்கொண்டு படையுள்ள இடங்களில் தடவிவர படை நிறம் மாறும்.⁠⁠⁠⁠

அமுக்கரா

அமுக்கரா 

1.   2கிராம்  உலர்ந்த  கிழங்குப்  பொடி  தேனில்  குழைத்து   காலை ,மாலை  சாப்பிட்டு வர  உடல்  பலவீனம்,  காசம்,   பசியின்மை,  மூட்டு   அழற்ச்சி,  செரிமானக்  குரைவு,   இருமல்,   உடல்வீக்கம்,  முதுமைத்   தளர்ச்சி   ஆகியவை   நீங்கும்.

2.    காயை  அரைத்துப்   படர்தாமரையில்   தடவிவரத்   தீரும்.

3.   வேர்ச்சூரணம்  5  கிராம்   தேனில்  காலை,  மாலை   கொள்ளச்  சளி  கரைந்து  (நிமோனியா)   கபவாதச்  சுரம்  தீரும்.

4,   சூரணத்தைப்  பாலில்   கலந்து  வீக்கம்,   படுக்கைப்  புண்   ஆகியவற்றிற்குப்  பூச   ஆறும்.

5.  வேர்சூரணம்  தூதுவேளை   கலந்து  5  கிராம்  நெய்யில்  தினம்  மூன்று  வேளை  பத்தியத்துடன்  கொடுத்து  வரச்  சிலேத்துமக்காய்ச்சல்,   பக்கச்  சூலைக்  காய்ச்சல்( Plurasy) தீரும்.

6.  அமுக்கரா  சூரணம்  10 கிராமக்,  கசகசா  30  கிராம்  பாதாம்  பருப்பு  10,கிராம்  சாரப்பருப்பு  5  கிராம்,  பிஸ்தாப்பருப்பு  5  கிராம்  ஊற  வைத்து   தோல்   நீக்கி   அரைத்து  200  மில்லி  பாலில்  கலந்து  சர்க்கரைச்  சேர்த்து  வெரும்  வயிற்றில்  காலையில்   மட்டும்  90  நாள்கள்  சாப்பி்ட   இழந்த  இளமையைப் பெறலாம்.

சித்தர்கள்வாக்குபொய்யாவதில்லை

#தம்பனமணி
அட்டாமாசித்துக்கதுளில் தம்பனம் என்பது போகம் உடலுறவின்போது இந்திரியம்(விந்து) வெளியேராமல் நீ்ண்டநேரம் போகம் செய்யம் சக்கதியை உருவாக்கிறது

#யோகமணி
யோக ஞான தியான முறையில் ஈடுபடுவோர்க்கு சிறந்த பலனையும் மன் ஒரு நிலையையும் உண்டு செய்து வீடு பெற பெரிதும் பயன்படும்

 #மோகணம்
மோகணம் என்பது  ஆண்பெண் வசியம் ஸ்திரீ பு ருஷ வசியம் சர்வ சனவசியம்  கணவன் மனைவி வசியம்

#சீவனவசியம்
தொழில் வியபாரம் வெளிநாடு அரசு வேலைவாய்ப்பு இவைகளில் உள் ளதடங்கள் நீங்கி பதிய மாற்றம் மற்றும் முன்னேற்றமான சாதகமான சூழ்நிலை உருாகும்

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பைக் கூட்டும்