Thursday, February 25, 2016

அமுக்கரா

அமுக்கரா 

1.   2கிராம்  உலர்ந்த  கிழங்குப்  பொடி  தேனில்  குழைத்து   காலை ,மாலை  சாப்பிட்டு வர  உடல்  பலவீனம்,  காசம்,   பசியின்மை,  மூட்டு   அழற்ச்சி,  செரிமானக்  குரைவு,   இருமல்,   உடல்வீக்கம்,  முதுமைத்   தளர்ச்சி   ஆகியவை   நீங்கும்.

2.    காயை  அரைத்துப்   படர்தாமரையில்   தடவிவரத்   தீரும்.

3.   வேர்ச்சூரணம்  5  கிராம்   தேனில்  காலை,  மாலை   கொள்ளச்  சளி  கரைந்து  (நிமோனியா)   கபவாதச்  சுரம்  தீரும்.

4,   சூரணத்தைப்  பாலில்   கலந்து  வீக்கம்,   படுக்கைப்  புண்   ஆகியவற்றிற்குப்  பூச   ஆறும்.

5.  வேர்சூரணம்  தூதுவேளை   கலந்து  5  கிராம்  நெய்யில்  தினம்  மூன்று  வேளை  பத்தியத்துடன்  கொடுத்து  வரச்  சிலேத்துமக்காய்ச்சல்,   பக்கச்  சூலைக்  காய்ச்சல்( Plurasy) தீரும்.

6.  அமுக்கரா  சூரணம்  10 கிராமக்,  கசகசா  30  கிராம்  பாதாம்  பருப்பு  10,கிராம்  சாரப்பருப்பு  5  கிராம்,  பிஸ்தாப்பருப்பு  5  கிராம்  ஊற  வைத்து   தோல்   நீக்கி   அரைத்து  200  மில்லி  பாலில்  கலந்து  சர்க்கரைச்  சேர்த்து  வெரும்  வயிற்றில்  காலையில்   மட்டும்  90  நாள்கள்  சாப்பி்ட   இழந்த  இளமையைப் பெறலாம்.

No comments:

Post a Comment