Sunday, April 3, 2016

குதிகால் வலி தீர்வுக்கு ஆயுர்வேத மருத்துவம்

குதிகால் வலி தீர்வுக்கு ஆயுர்வேத மருத்துவம்

உப்புகுத்தி வாதம் என்றும், குதிகால் வாதம் என்றும் குமரி மாவட்டத்தில் இதைச் சொல்கிறார்கள். இதை Calcaneal spur, Retrocalcaneal bursitis, Posterior heel spur என்று அழைப்பார்கள். "ஐயா, எழுந்திருந்து நடக்க ஆரம்பிக்கும்போது காலில் வலி ஏற்படுகிறது" என்று நோயாளிகள் சொல்கிறார்கள். தத்தித் தத்தி நடப்பார்கள். காலில் சிறிது வீக்கம் இருக்கும். இதில் நோயாளி அணிந்திருக்கும் செருப்பு முக்கியமானது. அதிக உயரமுள்ள காலணிகள், இறுக்கமான காலணிகள் போன்றவை இதற்குக் காரணம். சமீபத்தில் காலணியை மாற்றியதால் இப்படி ஏற்பட்டிருக்கலாம். குதிகால் வலி ஒரு காலில் மட்டும் வரலாம், இரண்டு கால்களிலும் வரலாம். இது காலின் பின்னால் உள்ள achilles tendonitis-யை அழுத்தலாம். என்ன நோய்? ஒருவருடைய தொழில் என்ன, ஓடியாடி வேலை செய்ய வேண்டுமா என்று பார்க்க வேண்டும். Gout நோயோ, கீல்வாயுவோ, முடக்கு வாதமோ, serum negative arthropathy என்கிற வாத ரக்த நோயோ உள்ளதா என்று பார்க்க வேண்டும். கணுக்காலின் பின்பகுதியில் வீக்கமும், சிவப்புத் தன்மையும் காணப்படும். தொட்டால் சற்றுச் சூடாக இருக்கும், வலி இருப்பதாகச் சொல்வார்கள். அடியில் வலி வருவதற்கு Plantar fasciitis என்று பெயர். தசைநார் கிழிந்துள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். இதற்கு என்று தனியாகப் பரிசோதனை உள்ளது. Achilles ஆடுசதையை நன்றாக அழுத்தும்போது கால் கீழே போக வேண்டும். விளையாடுபவர்கள், ஓடுபவர்களுக்கு இது அதிகம் வரும். ஆயுர்வேதத்தில் இது வாத நோயாகக் கருதப்படுகிறது. இதை வாதக் கண்டகம், குடுகா வாதம் என்று சொல்வார்கள். இவர்கள் வெந்நீரிலோ, காடி பாலிலோ, உப்பு வெந்நீரிலோ காலை முக்கி வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு வேண்டுமானால் ஐஸ் கட்டி வைக்கலாம். ஆயுர்வேதத்தில் இப்படிச் சொல்லப்படவில்லை என்றாலும், இது பலன் அளிக்கிறது. குதிகால் வலிக்குக் கைமருந்து # சிற்றரத்தை, அமுக்குரா, சுக்கு ஆகியவற்றைப் பொடித்துப் பாலில் போட்டுச் சாப்பிட்டு வர வேண்டும். # முடக்கறுத்தான், பிரண்டைத் துவையல் நல்லது # முடக்கறுத்தான் ரசம் மிகவும் நல்லது. # உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு, குப்பைக் கீரை போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். # தவிடு, உப்பு ஒத்தடம் கொடுத்து வரலாம். # மிதமான வெந்நீரில் உப்பு போட்டுக் காலை முக்கி வைக்கலாம் # வில்வக் காயைச் சுட்டு நசுக்கி, எருக்கிலை பழுப்பை அதன் மேல் விட்டுக் குதிகாலில் ஒத்தடம் கொடுக்கலாம்.

தலைமுடிபாரமரிப்பு

*தலைமுடி பராமரிப்பு மிகவும் அவசியமானது, நீங்களும் தலைமுடியை பரா மறிக்கறிங்க தானே எந்த மாதிரி பராமறீக்கறிங்க.

தினமும் ஷாம்பூ போட்டு தலை குளிக்கிறீங்களாஅப்படி பராமறிக்க கூடாது
கூந்தலுக்கு கேடு விளைவிக்ககூடிய செயல் இது போல வேறெதுவுமில்லை என்று அதிர்ச்சித் தகவல் தருகிறார் சென்னையில் ரம்யாஸ் பியூட்டி பாலரை நடத்துற சந்தியா

குளிக்கும் போது கவனிக்கவேண்டியவை

1.ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்து கொள்ளகூடாது.அப்படி செய்தால் தலையில் அப்பிக்கொள்ளும்

2.தினமும் ஷாம்பூ போட்டு குளித்தால் நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை வந்துவிடும்

3,தலைகுளிக்கும் போது ஷாம்பூவை தலையில் அப்படியே வைத்து தேய்க்க கூடாது.சிறிதளவு தண்ணீர் உற்றி கலக்கிய பிறகு தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.இப்படி செய்தால்தான் நீங்க எதிர் பார்க்கற நல்ல பலனை பெறமுடியும்.இல்லையேல் ஆபத்து தான் தலைமுடிக்கு விளையும்

கூந்தல் பராமரிப்புக்காக மேலும் சில டிப்ஸ்:

1.என்னதான் அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக்கூடாது.டவலால் நன்கு துடைத்து ஈரம் போய் தலைமுடி காய்ந்த பின்பு நல்ல தரமான சீப்புகளால் தலைசீவ வேண்டும்

2.வாரம் இரண்டு முறையாவது தலை குளிக்க வேண்டும்

3.மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்

4.இரவு படுக்கும்முன் கூந்தலை மென்மையாக வாரிவிட்டு படுக்க வேண்டும்.இது தலைமுடி நன்கு வளர உதவும்

5.அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல .....வேண்டுமானால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே உபயோகிக்கலாம்

6.கூந்தலை ப்ளீச் செய்வது கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

Saturday, April 2, 2016

பூநீறு தயாரிக்கும் முறை

பூநீறு பற்றி கூறலாமா அய்யா
அ கதிரேசன்: உவர்மண்ணைக் கொண்டு வந்து (ஒரு பங்கு எனில்) தண்ணீர் நான்கு பங்கு விட்டு கரைத்து தெளிவு நீரை எதுத்து பதமாக காய்ச்சி எடுக்க அதுவே பூநீறு ஆகும் ஐயா

வாழை குளியல்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..இன்றைய பதிவில் 'இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முறையான 'வாழை இலைக்குளியல்' பற்றி பார்ப்போம்..வாழை இலை ஒரு நல்ல கிருமி நாசினியாகும்..அதனால் வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகின்றன..
இந்த வாழை இலை இயற்கை மருத்துவத்தில் நமது உடலில் உள்ள அனைத்து நச்சுத் தன்மையையும்  {TOXINS} நீக்க பயன்படுத்துவார்கள்..இந்த முறையை நாம் வீட்டிலயே செய்யமுடியும்..காலை நேரத்தில் சுமாராக 8 To 9 மணி சமயத்தில் நமது வீட்டு மாடியில் சூரிய ஒளி நம் உடல் முழுதும் படும்படியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்..மேலும் இரண்டு நீளமான வாழை இலைகளை  எடுத்துக் கொண்டு, ஒரு இலையை தரையில் வைத்து அதன் மேல் நாம் படுக்க வேண்டும்..நம் உடல் முழுதும் வாழை இலையில் படும்படி இலை நீளமானதாக இருக்க வேண்டும்..மேலும் உள்ளாடை தவிர நாம் வேறு எந்த உடையும் இல்லாமல் படுக்க வேண்டும்..மற்றொரு இலையை நம் உடலின் மேல் பாகத்தில் நம் உடல் முழுதும் படும்படி வைத்து மூடிவிட வேண்டும்..வெளிக் காற்று புகாத படி கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதிகளில் ஒரு கயிறு மூலம் மெலிதான முடிச்சுமூலம் கட்டிவிட வேண்டும்..மொத்தத்தில் இரண்டு பெரிய வாழை இலைகளைக் கொண்டு நம் உடல் முழுவதையும் "complete pack" செய்கிறோம் அவ்வளவுதான்..
இந்த முறையில் என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு 5 to 10 நிமிடங்கள் போனபின் நம் உடல் முழுவதும் வியர்வை அருவி போல் கொட்டும்..நம் உடல் முழுவதும் சூடாகி உடனடியாக வெளியே வர வேண்டும் போல் இருக்கும்..ஆனால் 15 to 20 நிமிடங்கள் இருந்தால் நம் உடலில் உள்ள அணைத்து நச்சுத் தன்மைகளும் வியர்வை மூலம் வெளியேறி விடும்..தோல் நோய் உள்ளவர்கள், மூட்டு வலிகள் உள்ளவர்களுக்கு நல்ல பயன் தரும்...நம்  உடலின் இரத்தம் சுத்தமாகும்..ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் நோய் எதுவும் வராமல் இருப்பதற்கும் இந்த முறை உதவும்..பல வருடங்களாக உடலில் பல நச்சுத் தன்மைகள் தேங்குவதே கேன்சர் நோய் உட்பட பல நோய்களுக்கும் காரணம் என்பதால் இந்த முறை அனைவருக்கும் பயன்படும்..மற்ற மருத்துவ முறைகளுடன் இந்த முறையையும் பயன்படுத்தினால் நோய் விரைவில் குணப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும்..

அலுப்பு மருந்து

அலுப்பு மருந்து:

சுக்கு   -150 கிராம்
மிளகு  -100 கிராம்
திப்பிலி  -100 கிராம்
அக்கரை -   20 கிராம்
சித்தரத்தை  - 150 கிராம்

இவைகளை சுத்தி செய்து சூரணமாக்கி சுக்கு மல்லி காப்பியோடு கலந்தோ அல்லது கசாயமாக்கியோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட ,
  அலுப்பினால் உண்டாகும் தலைவலி, ஜலதோசம், கைகால் உளைச்சல், உடல் வலி, உற்சாகமின்மை, இருமல், வாய்வு, தூக்கமின்மை போன்றவற்றை நீக்கி உடலுக்கு நல்ல உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரும். இனிப்பு வேண்டியவர்கள் வெல்லம் அல்லது கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
(இது எங்கள் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஒன்று)

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்
கிடைக்கும்?

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல்
சூடு தணியும்.
தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,
வாய்ப்புண்கள் ஆறும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

இஞ்சி பால்

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்...
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும்.
தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்

மூலிகை வகை

மூலிகை வகை:

சௌந்தர்யம் -_ வெள்ளாம்பல்
ப்ருந்தா _- துளசி -
சப்ஜா - திருநீற்றுப் பச்சை
கூஷ்பாண்டம் -_ பூசணி
சாயாவிருட்சம் _ நிழல்காத்தான்
ரத்தபுஷ்பி _ செம்பரத்தை
மருந்து வகை:
ஔஷதம் _ அவிழ்தம்
லேஹியம் _ இளக்கம்
பஸ்பம் _ நீறு
கஷாயம் _ குடிநீர்
ப்ரமாணம் _ அளவு
சூரணம் _ இடிதூள்
நோய் வகை:
திருஷ்டி _ கண்ணேறு
க்ஷயம் _ என்புருக்கி
ஆஸ்துமா _ ஈளை இரைப்பு
அரோசகம் _ சுவையின்மை
அஜீர்ணம் _ செரியாமை
குஷ்டம் _ தொழுநோய்
மருந்துப் பொருள் வகை:
சொர்ணமாட்சிகம் _ பொன்னிமிளை
நேத்ரபூஷ்ணம் _ அன்னபேதி
ப்ரவளம் _ பவழம்
நவநீதம் _ வெண்ணெய்
லவணம் _ உப்பு
தசமூலம் _ பத்துவேர்
த்ரிகடுகு _ முக்கடுகு
த்ரிபலா _ முப்பலா

சமற்கிருதம் ஆக்கபட்ட தமிழ் மருத்துவத்தை தமிழாக்குவோம்

பழங்களின் மருத்துவ பயன்கள்

1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்

3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4.பேயன் வாழைப்பழம்
வெப்பத்தைக் குறைக்கும்

5.கற்பூர வாழைப்பழம்
கண்ணிற்குக் குளிர்ச்சி

6.நேந்திர வாழைப்பழம்
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7.ஆப்பிள் பழம்
வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

8.நாவல் பழம்
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9.திரட்சை
1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

10.மஞ்சள் வழைப்பழம்
மலச்சிக்கலைப் போக்கும்

11.மாம்பழம்
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

12.கொய்யாப்பழம்
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.

13.பப்பாளி
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

14.செர்ரி திராட்சை
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை சர்க்கரை நோய்க்கு நித்தியகல்யாணி மாத்திரை

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை

சர்க்கரை நோய்க்கு நித்தியகல்யாணி மாத்திரை

நித்தியகல்யாணியிச் செடியின் வேரைக் கொண்டு வந்து மைபோல அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்

வேளைக்கு  இரண்டு மாத்திரையிலிருந்து நான்கு மாத்திரை என ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுக்குள் வரும்.

மு.முருகன்
சிவகங்கை

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை இரத்த மூலம் குணமாக சித்தவைத்தியம்

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை

இரத்த மூலம் குணமாக சித்தவைத்தியம்

கனிந்த வாழைப்பழத்தோடு சீரகம் சேர்ந்துப் பிசைந்து காலையில் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் படிப்படியாக குணமாகும்.

மு.முருகன்
சிவகங்கை

முதுகுத்தண்டு அருகில் கட்டி உள்ளுது இதை எப்படி சரி செய்வது

முதுகுத்தண்டு அருகில் கட்டி உள்ளுது இதை எப்படி சரி செய்வது

முதுகு கட்டிக்கு கருஊமத்தை இலையை நல்லெண்ணெய் யில் காய்ச்சி தொடர்ந்து கட்டி வந்தால் குணம் கிடைக்கும்.

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை பெரும்பாடு எனப்படும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்த வைத்தியம்

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை

பெரும்பாடு எனப்படும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்த வைத்தியம்

வாழைக்காயை விறகு அடுப்பில் வைத்து சுட்டு, தோலை நீக்கி விட வேண்டும்
பின்பு
உள்காயை  எருமைத் தயிரில் கலக்கிச் சாப்பிட்டால் பெண்களின் உதிரப் பெருக்கு ஒரே வேளை மருந்தில் குணமாகிவிடும்
சிலருக்கு ஒரு வேளை மருந்தில் குணமாகாமலிருந்தால் அவர்களை மட்டும் மேற்கொண்டு இரண்டு வேளை சாப்பிட்டு பார்க்கலாம்.

மு.முருகன்
சிவகங்கை

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை பெண் கர்ப்பம் தரிக்க

அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை

பெண் கர்ப்பம் தரிக்க

குருக்கு என்னும் மூலிகைச் செடி ஒன்று உண்டு. பிரமதண்டு  என்றும் அதனைக் குறிப்பிடுவார்கள்

அந்த மூலிகையின் இலைகள் இரண்டு (மூலிகை சாப நிவர்த்தி செய்து எடுக்க வேண்டும்) சேகரித்து கரி மஞ்சள் துண்டு ஒன்றைச் சேர்த்து வைத்து அரைத்து மாதவிலக்கு காலத்தில் மூன்று நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மூன்று மாதங்களுக்கு கொடுத்து வந்தால் பெண் மலடு நீங்கி கருத்தரிப்பாள்.

குறிப்பு: வேறுவிதமான குறைகள் இருப்பின் முதலில் அதை சரி செய்து விட்டு இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்

மு.முருகன்
சிவகங்கை

Friday, April 1, 2016

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

05. காது மந்தம் போக்கும் தூதுவளை!

06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!

07. பித்த மயக்கம் தீர புளியாரை!

08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!

09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!

10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!

11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!

12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!

13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!

14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!

15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!

16. இளைத்த உடல் பெருக்க மிளகு!

17. பொடுகைப் போக்க தயிரில் குளி!

18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!

19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!

20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!

21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!

22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!

23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!

24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!

25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!

26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!

27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!

28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!

29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!

30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

'

சித்த மருத்துவத்தில் யார்யாருக்கு நோய்கள் தீராது என சித்தர்கள் கூறியுள்ளனர்

சித்த மருத்துவத்தில் யார்யாருக்கு நோய்கள் தீராது என சித்தர்கள் கூறியுள்ளனர்

பஞ்சமா பாதகர்க்கு பழிதனை நினைப்பவருக்கும் கெஞ்சியே மருந்து செய்து கேடுகள் நினைப்பவருக்கும் அஞ்சிடா வஞ்சகர்க்கும் அநியாயக்காரருக்கும் நஞ்சினுங் கொடியவர்க்கும் நாடியே பிணீ திராதே.

அதிமதுரத்தின் சிறப்பு

"அதிமதுரம்"

அதிமதுரம் என அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra என்பதாகும்.

வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள் சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி, பாம்பு இவற்றின் விஷம் நீங்கும்.

ஒன்றரை அடி உயரம் வளரும் இச்செடி இயற்கையாக மலைப்பகுதிகளில் விளைகிறது.

இலைகள் கூட்டிலையானவை.

ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும்.

காய்கள் 3 செ.மீ வரை நீளமாக சிறு முட்களுடன் காணப்படும்.

வேர்கள் கிளைத்தவை.

இவை சிறியதும் பெரியதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாகவும், வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

வேர்களே மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன.

மேலும், இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிமதுரம் வாணிப ரீதியாகப் பயிரிடப்படுகிறது.

அதிங்கம்,அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதுரம் ஆகிய மாற்றுப் பெயர்களும் அதிமதுரத்திற்கு உண்டு.

அதிமதுரம் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நெல் வயல்களில் அதிமதுரமும் அடர்ந்த களைச்செடியாக வளர்கிறது.

இலைகள் இனிப்பு சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை.

வேர்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டவை.

வேர் புண்கள், தாகம், இருமல்,தலைநோய்கள் ஆகியவற்றை குணமாக்கும்.

காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையைப் பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு.

ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும்.

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும்.

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும்.

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் அவசியம்"

உடல் எடை குறைய

[4/1, 1:23 PM] ‪+91 99422 86502‬: நாம் குடிக்கும் அளவிற்கு ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் எடுத்துக்கொண்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்! தண்ணீர் கொதித்த உடன் அதனுள் கறிவேப்பிலையை காம்புடன் போட்டு மூடிவைக்க வேண்டும்!
[4/1, 1:25 PM] ‪+91 99422 86502‬: தண்ணீர் ஆறிய வுடன் கறிவேப்பிலையை கொத்தாக தனியே எடுத்து தூரப்போட்டு நீரை மட்டும் குடிக்க வேண்டும்!
[4/1, 1:27 PM] ‪+91 99422 86502‬: இதை அதிகாலை செய்தால் விரைவில் வித்தியாசம் காணலாம்!
[4/1, 1:31 PM] ‪+91 99422 86502‬: மீதி தண்ணீரை வாட்டர் பாட்டிலில் அடைத்து வைத்து குடிநீருக்கு பதில் தாராளமாக பயன்படுத்தி வர உடம்பில் உள்ள அனைத்து தேவையற்ற கொழுப்புகளும் 5-7 நாட்களுக்குள் சிறுநீரில் கரைந்து வெளியேரி கட்டான உடம்பு தோன்றும்!
[4/1, 1:31 PM] ‪+91 99422 86502‬: இது என் அனுபவம்

Thursday, March 31, 2016

தாம்பத்தியம்

ஜாதிக்காயை ஒரு  முருங்கை மரதில் துளையிட்டு பதித்து வைத்து 3 நாட்கள் கழித்து எடுத்து தாம்பத்தியத்திற்க்கு ஒரு மணி நேரதிற்க்கு முன் வாயில் போட்டு ஊர வைத்து எச்சிலை விழுங்க. நீடித்த உறவு கொள்ள முடியும். இது தான் உண்மையான முறை

திப்பிலி ரசம்

திப்பிலி ரசம்

சளி, இருமல் தொல்லைகளுக்கு

செய்முறை:

புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரில் ரசப்பொடி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பிறகு அதில் பருப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் சிறிதாக அரிந்த திப்பிலி இலை அல்லது திப்பிலி பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து மூடி போட்டு, மூடிவிடவும். கடைசியாக நெய்யில் கடுகு, சீரகம் தாளித்து, ரசத்தில் சேர்த்தால், திப்பிலி ரசம் தயார்.

வைத்தியமுறை:

இந்த ரசத்தை இளஞ்சூடாக பருகலாம். அல்லது, சாதத்தில் கலந்து உண்ணலாம். சளித் தொல்லை, இருமல், குழந்தை மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படும் ஆஸ்துமா போன்ற நோய் நிலைகளில் இந்த ரசம் உண்பதால் நல்ல பலன் தெரியும். திப்பிலி, சுவாசப் பாதையை விரிவடையச் செய்யும், சளியை வெளியேற்றும்: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், அலர்ஜியை குறைக்கும்.

நீடித்த உறவிற்கு

பச்சை கொட்டை பாக்கை ஒரு கல்யாண முருங்கை மரதில் துளையிட்டு பதித்து வைத்து 3 நாட்கள் கழித்து எடுத்து தாம்பத்தியத்திற்க்கு ஒரு மணி நேரதிற்க்கு முன் வாயில் போட்டு ஊர வைத்து எச்சிலை விழுங்க. நீடித்த உறவு கொள்ள முடியும். இது ஓர் வைத்தியர் சொன்ன அனுபவ முறை.

சர்க்கரை நோய்க்கு( நீரிழிவு நோய்க்கு) பயப்பட தேவையில்லை

சர்க்கரை நோய்க்கு( நீரிழிவு நோய்க்கு) பயப்பட தேவையில்லை!

சர்க்கரை நோய்க்கு( நீரிழிவு நோய்க்கு) பயப்பட தேவையில்லை! பொய்யான நோய்க்கு தயவுசெய்து மருந்து சாப்பிடாதீர்கள்.......சர்க்கரை நோய் பற்றி சிறு விளக்கத்துடன் கூடிய எளிய தீர்வு

நீரிழிவு ஒரு அறிமுகம்
சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய்
சர்க்கரை நோய் பல பேருக்கு இருக்கிறது. சிலருக்கு இல்லை. அதற்காக, சர்க்கரை நோயில்லாதவர்கள் இதைப் படிக்க வேண்டாமென முடிவுக்கு வந்து விடாதீர்கள்! இப்பொழுது உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை. எப்படியும், எங்கேயாவது 'இலவசச் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்' ஒன்றைப் பார்க்க வாய்ப்புள்ளது. நீங்கள் அதில் சோதனை செய்து பார்க்கும் அன்று முதல் நீங்கள் சர்க்கரை நோயாளியாக்கப்படுவீர்கள். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களோ, இல்லாதவர்களோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை முழுவதுமாகப் படியுங்கள்!
நாம் சாப்பிடுகிற உணவில் மாவுச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்து, உயிர்ச் சத்து, தாதுப் பொருட்கள் போன்றவை உள்ளன. இவற்றுள் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) சர்க்கரையாக மாறுகிறது.
நம் உடம்பிலுள்ள செல்கள் இரத்தத்திலுள்ள சத்துப் பொருட்களைத் தன் தேவைக்காக எடுத்துக் கொண்டு உடலைச் செயல்பட வைக்கின்றன. ஒரு செல் கால்சியம், இரும்பு, சோடியம், மக்னீசியம் போன்ற எல்லாப் பொருட்களையும் சுலபமாக உள்ளே எடுத்துக் கொள்ளும். ஆனால், சர்க்கரையை மட்டும் நேரடியாக எடுத்துக் கொள்ளாது. செல்கள் சாக்கரையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக அது நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா என்று ஆராய்ச்சி செய்யும். உணவிலுள்ள மாவுச் சத்து வாயிலே, வயிற்றிலே, சிறுகுடலிலே ஒழுங்காக ஜீரணம் ஆனால் கிடைப்பது நல்ல சர்க்கரை. ஒழுங்காக ஜீரணமாகாமல் அரைகுறையாக ஜீரணமாகி வரும் சர்க்கரை கெட்ட சர்க்கரை. நல்ல சர்க்கரையென்பது வீரியம் அதிகமுள்ள சர்க்கரை. கெட்ட சர்க்கரையென்பது வீரியம் குறைந்த சர்க்கரையென்றும் எடுத்துக் கொள்ளலாம்.
செல் சர்க்கரையிடம் நீ நல்லவனா, கெட்டவனா என்று கேட்கும். சர்க்கரையோ, நாயகன் படத்தில் வரும் கமல்ஹாசனைப் போல, "தெரியலையேப்பா!" என்று கூறி விடும். செல்களுக்கு நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை எனப் பிரித்துப் பார்க்கும் அறிவு கிடையாது. எனவே, செல்கள் சர்க்கரையிடம், "நமது உடலில் கணையம் (Pancreas) என்ற உறுப்பு இருக்கிறது. அவரிடம் செல்! நீ நல்ல சர்க்கரையாக இருந்தால் அவர் உனக்கு இன்சுலின் (கணைய நீர்) கொடுப்பார்" என்று கூறி விடும். இரத்தத்திலுள்ள சர்க்கரை நேரடியாக எந்தச் செல்லுக்குள்ளேயும் போக முடியாது.
கணையம் இரத்தத்திலுள்ள ஒவ்வொரு சர்க்கரையாக எடுத்து ஆராய்ச்சி செய்யும். நல்ல சர்க்கரையாக இருந்தால் அதற்கு இன்சுலின் என்கிற முத்திரை கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. ஆக, கணையம் சர்க்கரையின் தரத்தைச் சோதனை செய்யும் ஒரு தரக் கட்டுப்பாட்டு அலுவலர். எந்தச் சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகிறதோ அந்தச் சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் என்கிற முத்திரை கிடைக்கிறது. செல்கள் இரத்தத்திலிருக்கும் சர்க்கரையை எடுத்துப் பார்க்கும். அந்தச் சர்க்கரையில் இன்சுலின் என்கிற முத்திரை இருந்தால் மட்டுமே நல்ல சர்க்கரையென்று முடிவு செய்து உள்ளே எடுக்கும். இதனால், தரம் குறைந்த சர்க்கரை செல்லுக்குள் செல்லமுடியாது. இப்படி, உடலிலுள்ள செல்கள் அனைத்தையும் நோயிலிருந்து காப்பாற்ற, ஆரோக்கியமாக வைத்திருக்க, கணையம் பேருதவியாக இருக்கிறது.
"என்ன இது புதுக் குழப்பமாக இருக்கிறது! நான் பத்து வருடமாகச் சர்க்கரை நோயாளியாக இருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவரிடம் சென்றிருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். இது வரை யாரும் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையென்று சொல்லவே இல்லையே? நீங்கள் என்ன புதிதாக உளறுகிறீர்கள்" என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உண்மையில், இதுவரை நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் 10 ஆண்டுகளாக உங்கள் நோய் குணமாகாமல் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்ற வேறுபாட்டை எப்பொழுது தெரிந்து கொள்கிறீர்களோ, அந்த நிமிடம் முதல் உங்கள் சர்க்கரை நோய் குணப்படுத்தப்படும்.
சர்க்கரையில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அளவு மாறாமல் வேவ்வேறு இடங்களுக்கு மாறி அமைவதால் சர்க்கரையின் வகை மாறுகிறது. லேக்டோஸ், மேனோஸ், ஒற்றைச் சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை - இப்படிச் சர்க்கரையில் பல வகைகள் உள்ளன
சர்க்கரை ஒரு ஐசோமர். உயிர்ம வேதியியல் (Bio – Chemistry ) படித்தவர்களுக்கு நன்றாகப் புரியும் என நினைக்கிறேன். ஒரே பொருளில் நிறைய வகைகள் (Type) இருந்தால் அதை ஐசோமர் என அழைக்கிறோம்.
சர்க்கரையில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அளவு மாறாமல் வேவ்வேறு இடங்களுக்கு மாறி அமைவதால் சர்க்கரையின் வகை மாறுகிறது.
லேக்டோஸ், மேனோஸ், ஒற்றைச் சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை - இப்படிச் சர்க்கரையில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு கட்டமைப்பு (STRUCTURE) உள்ளது.
இவற்றுள், ஒரு சில வகைச் சர்க்கரைகள் மட்டுமே மனித உடம்பிலுள்ள செல்களுக்குப் பொருந்தும். ஒரு சில சர்க்கரைகள் பொருந்தாது. எந்தெந்த வகைச் சர்க்கரை மனித உடம்புக்குப் பொருந்துமோ அவை அனைத்தும் நல்ல சர்க்கரைகள்.
எவையெல்லாம் பொருந்தாதோ அவை அனைத்தும் கெட்ட சர்க்கரைகள். கணையம், எந்த வகைச் சர்க்கரை மனித உடம்புக்கு ஒத்து வருமோ, அதற்கு மட்டுமே இன்சுலின் கொடுக்கும். மனித உடலுக்கு நோயை உண்டு பண்ணுகிற, ஒத்து வராத, தேவைப்படாத சர்க்கரைகளுக்கு இன்சுலின் கொடுக்காது.
நாம் மருத்துவமனைகளில் சென்று சர்க்கரைச் சோதனை செய்கிறோம். அதில் 100 இருக்கிறது, 200 இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த அளவில் எந்தெந்த சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று யாரும் அளந்தது கிடையாது. இப்படி, மொத்தமாகச் சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. நாம் பார்க்கும் சர்க்கரையின் அளவில் எந்தெந்த வகைச் சர்க்கரை எந்த அளவு இருக்கின்றது எனப் பார்ப்பதற்குத் தனியாக ஒரு கருவி உள்ளது. அதன் பெயர் IR STUDY மற்றும் UV Spectrum Study. இந்த வசதி உள்ள கருவிகளில் மட்டுமே இரத்தத்திலுள்ள சர்க்கரை வகைகளைக் கண்டறிய முடியும். இந்தக் கருவிகள் எந்த மருத்துவமனையிலும் கிடையாது. பெரிய பெரிய ஆராய்ச்சிக்கூடங்களில் மட்டுமே உள்ளன. எனவே, சர்க்கரையைப் பொதுவாகச் சோதனை செய்து பார்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை. எந்தப் பயனும் கிடையாது.
மருத்துவமனையில் நீரிழிவுச் சோதனை முடிந்ததும் அறிக்கையில் (ரிசல்ட்) 'இரத்தத்தின் சர்க்கரை அளவு' (Blood Glucose Level) என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.உண்மையில், இரத்தத்தின் சர்க்கரை அளவை யாரும் பார்ப்பது கிடையாது. இப்பொழுது பார்க்கப்படும் அளவு Plasma Glucose Level ஆகும். Plasma Glucose Level என்பது வேறு. இரத்தத்தின் சர்க்கரை அளவு என்பது வேறு.
சொல்லப் போனால், சர்க்கரை நோயென்பது கணையம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உள்ள சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகாததால் கணையம் இன்சுலின் கொடுக்க மறுக்கிறதே தவிர, கணையம் தவறு செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! எப்பொழுது உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறதோ நாம் உணவை ஒழுங்காக ஜீரணம் பண்ணவில்லை என்றுதான் அர்த்தமே தவிர, கணையத்தில் குறை கிடையாது. இதற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, உணவை எந்த முறையில் சாப்பிட்டால் அது இரத்தத்தில் நல்ல சர்க்கரையாகக் கலக்கும் என்கிற ஒரே ஒரு சுலபமான வித்தையைக் கற்றுக் கொள்வது மூலமாக நாம் இந்த நிமிடத்தில் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும். கணையம் இன்சுலின் வைத்துக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்குத் தராமல் வேறு யாருக்குக் கொடுக்கும்? முன்பே பார்த்தபடி, நாம் சாப்பிடுவது நல்ல சர்க்கரையாக இருந்தால் மட்டுமே கணையம் இன்சுலினைக் கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்பவை என்ன என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள மேற்கொண்டு சில எடுத்துக்காட்டுகளையும் விளக்கங்களையும் பார்க்கலாம்.
நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)
மேலும் படிக்க
சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 2 - கிளைகோஜன் மற்றும் அட்ரினல் சுரப்பியின் பங்கு
http://reghahealthcare.blogspot.com/2014/12/2.html
சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 3 - High Sugar(ஹை சுகர்), Low Sugar (லோ சுகர்) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/3.html
சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 4 - Sugar Free (சுகர் ப்ரீ) பற்றிய தெளிவான விளக்கம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/4.html
சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை! பாகம் 5 - அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம்
http://reghahealthcare.blogspot.com/2014/12/5.html
இனிப்பு சிகிச்சை (இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்)
http://reghahealthcare.blogspot.in/2014/12/blog-post.html
For more info visit:
https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in/
நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.
திருக்குறள் (அறிவுடைமை #0423)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
தெளிவுரை:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.
இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.
Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

மூலிகை நீர்

மூலிகை நீர்

சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

ஆவாரம்பூ நீர்

"ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ" என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது. காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்

"தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்" என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். "காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை" என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.

ரத்த விருத்தி தரும் வாழைக்காய்!

ரத்த விருத்தி தரும் வாழைக்காய்!
வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.
வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.
இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடுவதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.
பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

இஞ்சி காயகல்பம் !!!:

இஞ்சி காயகல்பம் !!!:

செய்முறை:
நன்கு சுத்தபடுத்திய மேல்தோல் நீக்கிய இஞ்சி 300 கிராம் எடுத்து அதை சிறியதுண்டுகளாக நறுக்கி, அதில் சுத்தமான மலைத்தேன் விட்டு,
இரண்டையும் ஒரு வாயகன்ற பத்திரத்தில் விட்டு அதில் மூழ்கும் வரை தேன்நன்கு விடவும்.
பின்பு அதை சூரிய ஒளியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 30 நாட்கள் வைத்துஎடுத்து பாதுக்காக்கவும்.
3 முதல் 5 வில்லைகள் தினமும் காலை மட்டும் சாப்பிடவும்.
இத்துடன் அரிசி 250 gm மற்றும் இளநீர் மட்டும் அருந்திவரலாம்.
இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்தாலே நரை, திரை, மூப்பு மற்றும் பிணி சாக்காடு இன்றி வாழலாம் .

சளியை விரட்ட ஐந்து மருந்து பொடி! கை மருந்துகள்!!

சளியை விரட்ட ஐந்து மருந்து பொடி! கை மருந்துகள்!!

இயற்கை முறையில் வைத்தியம் செய்து கொள்வது ஆரோக்கியமான உடலுக்கும் நாம் நோய் இன்றி வாழவும் வழிவகுக்கும்.

இப்பொழுது நோய் வந்தால் டாக்டரிடம் ஓடுவதும், கண்ட மருந்துக்களை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதும் பெரும்பான்மை மக்களின் வழக்கமாகி போனது. அதை முதலில் ஒழிக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு வீட்டிலும் பொடி செய்து வைத்திருக்க வேண்டிய அறிய மருந்துதான் ஐந்து மருந்து பொடி. இதை தயாரிக்கும் முறையும், உட்கொள்ளும் முறையும் பற்றி பார்ப்போம். இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 

சளிக்கு ஐந்து மருந்து பொடி: சுக்கு, மிளகு, அக்கரா, திப்பிலி, கடுக்காய் இவற்றை சம எடை வாங்கி உரலில் (மிக்ஸியில் போட்டு அல்ல) போட்டு இடித்து பொடியாக்கி வெள்ளை துணியில் போட்டு பவுடராக அரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை: சளி ஏற்ப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை, இரவு என்று மூன்று வேலைக்கும் இதை கால் மேஜை தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் அரை, அல்லது ஒரு சிட்டிகை அளவுக்கு ( சிட்டிகை என்பது நமது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை கொண்டு அந்த பொடியை எடுக்கும் அளவு) எடுத்து தேனில் கலந்து கொடுங்கள்.

சைனஸ்’ ன் ஆரம்பம் ஜலதோஷம் – அதனை வீட்டிலேயே குணப்படுத்த இலகுவான வழிமுறை!

சைனஸ்' ன் ஆரம்பம் ஜலதோஷம் – அதனை வீட்டிலேயே குணப்படுத்த இலகுவான வழிமுறை!

அடிக்கடி சளி பிடித்தல்
ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம்தான் சைனஸ். ஜலதோஷம் என்பது 3
நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடக்கூடிய ஒன்று. அதன் பிறகும் ஜலதோஷம் குணமாகவில்லை என்றால் `சைனஸ்' கோளாறின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சைனஸ் பிரச்சினையில் சிக்குபவர்களால் நன்றாக சுவாசிக்க முடியாது. சரியாக பேசவும் இயலாது. தலை பாரமாக இருக்கும். குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தெறிக்கிற மாதிரி தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.
சளி பிடிக்காமலிருக்க எளிய வழிகள்:
🌀 குளிர்ந்த தண்ணீரில் தலை குளிக்கக் கூடாது. குளியல் முடிந்ததும் ராஸனாதி சூரணத்தை உச்சந்தலையில் சூடு பறக்கத் தேய்த்துவிடவும்.
🌀 ராஸனாதி சூரணத்தைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தது குறுமிளகு பொடி (black pepper). இரண்டு விரலால் சிறிதளவு (one pinch) எடுத்து தலைக்கு குளித்தவுடன் உச்சந்தலையில் சூடு பறக்கத் தேய்த்துவிடவும்.
சைனஸ் பிரச்சனையை போக்க…
⭕ ஒரு வாணலியில் நல்லெண் ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டு ம். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.
⭕ தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
⭕ தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க்கோர்வை போன்றவை சரியாகும்.
⭕ குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண் டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
⭕ கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி , காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்.
எனவே மேற்கூறியவற்றையெல்லாம் செய்து, சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை ஈஸியான முறையில் வீட்டிலேயே சரிசெய்யலாம்.

இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில்) இதுவே சிறந்த மருந்து !!!

இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில்) இதுவே சிறந்த மருந்து  !!!

கசாயப்பொடி.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிச்ச பத்திரி, சித்தரத்தை, பேரரத்தை, அதிமதுரம் முதலியவற்றை சரிவிகித எடையில் கலந்து பொடியாக தயாரித்து பொடியாக வைத்துக்கொள்ளவும்.

இந்தப்பொடியில் ஒரு கிராம் (கால் தேக்கரண்டி) அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெல்லம் சேர்த்து வடிகட்டி காபி குடிப்பது போல குடிக்கலாம்.

மூக்கு ஒழுகும் உள்ள நேரத்திலும் சளி, இருமல், காய்ச்சல் சமயத்திலும் தினசரி ஐந்து தடவை காபி மாதிரி சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கும்படி தயாரித்து குடிக்கவும்.

காரம் அதிகமாக இருந்தால் தண்ணீர் கலந்து சுவையாகத்தான் சாப்பிட வேண்டும். காரமாக சாப்பிடக்கூடாது.

அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில் இதுவே சிறந்த மருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

Wednesday, March 30, 2016

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...



தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,

பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,

இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்

அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்

(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,

தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை

நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்

வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம். 

தகவல் சித்த மருத்துவ அணி.

வெயில் கால முத்திரை...!!!நிம்மதியான நித்திரைக்கு நீர் முத்திரை !




நமது உடல், 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது. ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், ஏன் எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன. உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.

எப்படிச் செய்வது?
கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.

கட்டளைகள்:
தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து, 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.

மழைக் காலம், குளிர் காலங்களிலும், குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களும் இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும்.

ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.

முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

பலன்கள்:
உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரியாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது அரை மணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.

அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள், வெயிலில் விளையாடும் குழந்தைகள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த முத்திரையைக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வது நல்லது. கண் வறட்சி, கண் எரிச்சல், கண் சிவந்துபோதல், கண் சோர்வு போன்றவை குணமாகும். உடலில் நீர்த்தன்மை குறைவதால், கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. இந்த முத்திரையை இரண்டு வாரங்கள் செய்துவர, கருவளையம் மறையும்.

சரும வறட்சி சரியாகி, சருமம் பளபளக்கும். பருத் தொல்லை நீங்கும். சரும நோய்கள் சரியாகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட தோல் சுருக்கங்கள் குறைந்து, சருமத்தில் ஈரப்பதம் காக்கப்படும்.

வறட்சியான கூந்தல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் தலை சூடு, முடி கொட்டுதல் பிரச்னை சரியாகும்.

எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகம், சர்க்கரை நோயால் ஏற்படும் அதிகத் தாகம் (Polydypsia) பிரச்னை சரியாகும்.

நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கல்லடைப்பு, தொடர் தும்மல், கெண்டைக்கால் பிடிப்பு போன்றவை சரியாகும்.

வெள்ளைப்படுதல் பிரச்னை, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலி மட்டுப்படும்.

வயோதிகத்தில் மூளையில் நீர்த்தன்மை குறைவதால் ஏற்படும் ஞாபகமறதிப் பிரச்னை குறையும். மனம் அமைதியாகி, ஆழ்ந்த தூக்கம் வரும்.

நன்றி தோழி - கல்பனா தேவி

ரத்த விருத்தி தரும் வாழைக்காய்!


வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.
வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.
இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடுவதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.
பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

இஞ்சி காயகல்பம் !!!:


செய்முறை:
நன்கு சுத்தபடுத்திய மேல்தோல் நீக்கிய இஞ்சி 300 கிராம் எடுத்து அதை சிறியதுண்டுகளாக நறுக்கி, அதில் சுத்தமான மலைத்தேன் விட்டு,
இரண்டையும் ஒரு வாயகன்ற பத்திரத்தில் விட்டு அதில் மூழ்கும் வரை தேன்நன்கு விடவும்.
பின்பு அதை சூரிய ஒளியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 30 நாட்கள் வைத்துஎடுத்து பாதுக்காக்கவும். 
3 முதல் 5 வில்லைகள் தினமும் காலை மட்டும் சாப்பிடவும். 
இத்துடன் அரிசி 250 gm மற்றும் இளநீர் மட்டும் அருந்திவரலாம்.
இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்தாலே நரை, திரை, மூப்பு மற்றும் பிணி சாக்காடு இன்றி வாழலாம் .

சளியை விரட்ட ஐந்து மருந்து பொடி! கை மருந்துகள்!!



இயற்கை முறையில் வைத்தியம் செய்து கொள்வது ஆரோக்கியமான உடலுக்கும் நாம் நோய் இன்றி வாழவும் வழிவகுக்கும்.

இப்பொழுது நோய் வந்தால் டாக்டரிடம் ஓடுவதும், கண்ட மருந்துக்களை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதும் பெரும்பான்மை மக்களின் வழக்கமாகி போனது. அதை முதலில் ஒழிக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு வீட்டிலும் பொடி செய்து வைத்திருக்க வேண்டிய அறிய மருந்துதான் ஐந்து மருந்து பொடி. இதை தயாரிக்கும் முறையும், உட்கொள்ளும் முறையும் பற்றி பார்ப்போம். இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 

சளிக்கு ஐந்து மருந்து பொடி: சுக்கு, மிளகு, அக்கரா, திப்பிலி, கடுக்காய் இவற்றை சம எடை வாங்கி உரலில் (மிக்ஸியில் போட்டு அல்ல) போட்டு இடித்து பொடியாக்கி வெள்ளை துணியில் போட்டு பவுடராக அரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை: சளி ஏற்ப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை, இரவு என்று மூன்று வேலைக்கும் இதை கால் மேஜை தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் அரை, அல்லது ஒரு சிட்டிகை அளவுக்கு ( சிட்டிகை என்பது நமது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை கொண்டு அந்த பொடியை எடுக்கும் அளவு) எடுத்து தேனில் கலந்து கொடுங்கள்.

இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில்) இதுவே சிறந்த மருந்து !!!



கசாயப்பொடி.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிச்ச பத்திரி, சித்தரத்தை, பேரரத்தை, அதிமதுரம் முதலியவற்றை சரிவிகித எடையில் கலந்து பொடியாக தயாரித்து பொடியாக வைத்துக்கொள்ளவும்.

இந்தப்பொடியில் ஒரு கிராம் (கால் தேக்கரண்டி) அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெல்லம் சேர்த்து வடிகட்டி காபி குடிப்பது போல குடிக்கலாம்.

மூக்கு ஒழுகும் உள்ள நேரத்திலும் சளி, இருமல், காய்ச்சல் சமயத்திலும் தினசரி ஐந்து தடவை காபி மாதிரி சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கும்படி தயாரித்து குடிக்கவும்.

காரம் அதிகமாக இருந்தால் தண்ணீர் கலந்து சுவையாகத்தான் சாப்பிட வேண்டும். காரமாக சாப்பிடக்கூடாது.

அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில் இதுவே சிறந்த மருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

பீனிசம் என்னும் சைனஸ் நோய் நீங்க செண்பகப் பூ தைலம் !!!



செண்பகப் பூ இதழ்கள் ....இருபத்தி ஐந்து கிராம் இதழ்கள் மட்டும்
செக்கு நல்லெண்ணெய் .....நூறு மில்லி

நல்லெண்ணெய்யை நன்கு காய்ச்சி கொதிக்கும் எண்ணெயில் செண்பகப் பூ இதழ்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப்  போட்டுக் கிளறி தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி ஆற வைத்துப் பாட்டிலில் சேமிக்கவும்

பயன் படுத்தும் முறை
காலை எட்டு மணிக்கு மேல் மாலை மூன்று மணிக்குள் நெற்றிப் பொட்டு - மூக்கின் மேல் பகுதி - ஆகிய இடங்களில் இரண்டு முறை இந்தத் தைலத்தைத் தேய்த்து உள்ளங்கையில் ஒரு சொட்டு ஊற்றித் தேய்த்து  முகர்ந்து பார்க்க வேண்டும்

இவ்வாறு செய்து வர பத்து நாட்களில் பீநிசம் குணமாகும்
இது எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
இது மருத்துவர் கே எஸ் முருகன் அவர்களால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை எட்டு மணி முதல் எட்டரை மணி வரை ஒளி பரப்பாகும் பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் செய்து காட்டியது  ஆகும்

-தகவல்,நன்றி :- பொன்.தங்கராஜ்

Thursday, March 24, 2016

கோடைக் கட்டிக்கு

கோடை காலத்தில் முகத்திலும்,கழுத்திலும் கட்டிகள் ஏற்படுகிறது. கட்டியைக் கிள்ளுவதும்,பிய்த்து எடுப்பதும், நசுக்குவதும் உண்டு. இப்படி செய்யக் கூடாது கட்டிகளின் மீது மருந்திட்டு உடைய வேண்டும். அல்லது அமிழ்ந்து விட வேண்டும்.

இதற்கான வைத்தியம்

வேப்பிலை,மஞ்சள், சந்தனம் மூன்றையும் அரைத்து பற்றுப்போட்டு வர கட்டிகள் உடையும் விரைவில் குணமாகும்.

மருதாணி இலை,குப்பைமேனி இலை,மஞ்சள் மூன்றையும் அரைத்துப் போ ட கட்டிகள் குணமாகும்.

மஞ்சள் தூளைச் சோற்றுக் கற்றாழைச் சோற்றில் குழைத்து போட்டு வரக் கட்டிகள் குணமாகும். முகம் அழகாகும்.

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தலைப்புண் கட்டி,சிரங்குகளுக்கு சித்த மருத்துவம்

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தலைப்புண் கட்டி,சிரங்குகளுக்கு சித்த மருத்துவம்

கடுக்காய்த் தோல்-150கிராம்
மருதோன்றி இலை-150கிராம்
குப்பைமேனி இலை-150கிராம்
கசகசா-150கிராம்

மருதோன்றி இலையையும்,குப்பைமேனி இலையையும் பச்சையாக எடுத்து நிழலில் உலர்த்தி பின்பு நான்கு சரக்குகளையும் தனித்தனியாக இடித்து குறிப்பிட்டுள்ள எடை எடுத்துக் கொண்டு கலந்து மீண்டும் இடித்து மெல்லிய துணியால் சலித்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்

குழந்தையை குளிப்பாட்டு முன் தேவையான அளவு துளை எடுத்து வெந்நீரில் குழைத்து தலை முழுவதும் கனமாக தடவி பத்து நிமிடங்கள் காய வைத்து வெதுவெதுப்பான நீரில் தலை முழுகவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலை முழுகி வர எட்டு தலை முழுக்கில் தலைப்புண் கட்டி, சிரங்குகள் குணமாகும்

மு.முருகன்
சிவகங்கை

Wednesday, March 23, 2016

உடல் சூடு குறைய வைத்தியம்

Nelson: உடல் சூடுகுறைய எளிய முறை சொல்லுங்க
சுபன் அய்யா: விளக்கெண்ணெயை உள்ளங்காலில் மற்றும் தொப்புலில், உச்சந்தலையில் தடவவும் உடல் சூடு குறையும்
சிவகங்கை பழைய புத்தக கடை: இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிடுங்கள். காலை எழந்தவுடன் வெந்தயத்தை மிக்ஸியில் அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து விடுங்கள்
உடல்சூடு குறைய இது தான் எளிய வைத்தியம்
Dr. sivakarthi: கொத்தமல்லி விதை கஷாயத்தில் கருந்துளசி சாற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிகமான உடற்சூடு குறையும்
அடியவன்: வெள்ளைபூண்டு மற்றும் சிறிது  மிளகை நல்லொண்ணை யில் இள சூட்டில் வறுத்து எண்ணை சூடு ஆகிய பின் பத்திரப்படுத்தி, தினமும் காலை இரு கால் பெருவிரல் நகங்களிள் மட்டும் தடவினால் சூடு உடனடியாக குறைந்துவிடும். 🙏
அ கதிரேசன்: உடல் சூடுதணிய எளிய மருந்து :
சிறுநன்னாரி வேர் கொண்டு வந்து காயவைத்து தூளாக்கி காலை மாலை கால் தேக்கரண்டி வீதம் தேன் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட உடல் சூடுதணியும், மேலும்  சிறுநீர் எரிச்சல்., ஆண், பெண் வெட்டைச்சூடு, கண்ணெரிச்சல், சூட்டினால் வரும் தலைவலி.,தூக்கமின்மை போன்றவை தீரும்.

வாத வேங்கை வர்ம ஜோதி தைலம்

வாத வேங்கை வர்ம ஜோதி தைலம்.
1. தேங்காய் எண்ணெய் 1 1/2.லிட்டர்
2. சீனம் 100 gm
3. நவசாரம் 100 gm
4. வெள்ளை பூண்டு 100 gm
5. மிளகாய் வத்தல் 10 gm
6. வெற்றிலை 5 no's
7. டர்பன் ஆயில் 30 ml
8. தேன்மெழுகு 10 gm
9. கட்டி கற்பூரம் 10 gm
10. வேம்பாடம் பட்டை 25 gm
11. பச்சை கற்பூரம் 5 gm
12. புகையிலை 10 gm
செய்முறை :
சீனம்,சாரம் ,தனித்தனியே பொடித்து கொள்ளவும்.பூண்டு தோல் உரித்து சேர்த்து அரைத்து வழித்து இரும்பு சட்டியில் போட்டு,மிளகாய் வற்றல்,வெற்றிலை,புகையிலை கிள்ளி போட்டு எண்ணெய் முழுவதும் ஊற்றி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து கற்கம் கறுத்து சட்டியில் ஒட்டும்.தைலம் காய்ச்சும் ஆரம்பம் முதல் முடிவு வரை கரண்டியால்  கிண்டி கொண்டே இருக்கவும்.கற்கம் மணல் பதம் வரும் போது சட்டியை கீழ் இறக்கி வடி கலசத்தில் தேன் மெழுகை சீவி போட்டு,கட்டி கற்பூரம்,பச்சை கற்பூரம் பொடித்து சேர்க்கவும்.வடிகலசத்தில் மேல் துணியை சல்லடைபோல் வேடு கட்டி வேம்பாடம் பட்டையை பொடித்து தூவி அதன் மேல் சூடான தைலத்தை வேம்பார் பட்டை தூளின் ஊற்றவும்.எண்ணெய் சிவப்பாக மாறி கீழிறங்கி மெழுகு சூடங்களை தன்னுடைய சூட்டால் கரைத்துசேர்த்துக்கொள்ளும்.பிறகு டர்பன் ஆயில் சேர்க்கவும்.
தீரும் நோய்கள் :
1. மூட்டு வலி
2. கைகால் குடைச்சல்,
3. ரத்தக்கட்டு
4. அடிபட்ட வீக்கம்
5. சுளுக்கு
6. நரம்பு பிசகல்
7. சதைப் பிடிப்பு
8. மத மதப்பு
9. குதிங்கால் வலி
10. கழுத்துப் பிடிப்பு
11. மூச்சுப் பிடிப்பு
12. தோள்பட்டை வலி
13. உடம்புவலி
14. பக்க வாதம் முதலியவை தீரும்.
உபயோகிக்கும் முறை :
தூங்குவதற்கு முன்பாக 5 முதல் 10 சொட்டு வர்ம தைலம் எடுத்து சூடு உண்டாகும்படி கையினால் பாதித்த பகுதியில் தேய்க்கவும்.மறுநாள் காலை சுடு தண்ணீரில் குளிக்கவும்.or உப்பை சட்டியில் தெறிப்பு அடங்க வறுத்து துணியில் முடிந்து இளஞ்சூட்டில்ஒத்தடம் கொடுக்கவும்.

இதய நோய் மற்றும் இரத்த அழுத்தை குணபடுத்தும் தேனில் ஊறவைத்த பூண்டு செய்வது எப்படி..?

இதய நோய் மற்றும் இரத்த அழுத்தை குணபடுத்தும் தேனில் ஊறவைத்த பூண்டு செய்வது எப்படி..?

இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது.....
தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட பூண்டு விழுதுகள் 20.
தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)

பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். (ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கெடாமல் இருக்கும் தன்மையுடையது)

சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.

தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது. எகிப்தில் இருந்து நமது தமிழ் கலாச்சாரம் வரை பூண்டை ஓர் மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தியுள்ளனர்.

பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்து பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பூண்டு இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

Saturday, March 19, 2016

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

மருந்தாக பயன்படும் கீழாநெல்லிக் கீரை

நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்.  கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது.  கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். 

இக்கீரை பசியை நன்றாகத் தூண்டும்.  சொறி, சிரங்குகளுக்கு இக்கீரையை உப்புடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிட்டும். காயங்களுக்கு உப்பு சேர்க்காமல் வெறுமனே இக்கீரையை அரைத்து, பற்றுப் போட்டால் காயங்கள் விரைவில் ஆறும்.  கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் போதும். பார்வை மிகும். கண்பார்வை கூர்மை பெறும்.

குடல்புழு நீக்கும்

வேலு சசி: குப்பைமேனி வேர் சூரணம் குடல் புழுவை நீக்கும்.
          
அ கதிரேசன்: குப்பைமேனி சூரணம் : செடியை கொண்டுவந்து நிழலில் உலர்த்தி பிறகு நன்கு காய்ந்தபின் இடித்து சலித்து வைக்க இதுவே குப்பைமேனி சூரணம் ஆகும்,

மூட்டுத் தேய்மானம்: இயற்கை மருத்துவம்

மூட்டுத் தேய்மானம்: இயற்கை மருத்துவம் !

கைமருந்துகள்

இது அல்லாமல் கைமருந்தாகப் பல மருந்துகள் உள்ளன அவற்றைப் பார்ப்போம்:

கருஞ்சீரகம், புளி இலை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.

எலுமிச்சை பழச்சாறு விட்டு சுக்கை அரைத்துப் பத்துப் போடலாம்.

குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

வசம்பை, காசுக்கட்டி

உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.

பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து அருந்தலாம்.

சிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம்.

குங்கிலியத்தைப் பொடித்து அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்துப் பாலில் கலந்து பருகலாம்.

ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.

நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது.

மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

http://vasukimahal.blogspot.in/

வலிப்பு நோய்க்கு

வலிப்பு நோய்க்கு வேப்பெண்னை 2லிட்டர் பூண்டு தோல் உரித்தது 100கிராம் வசம்பு சுக்கு தலா25கிராம் சட்டியில் வேப்பெண்ணையை விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் எரிக்கவும் எண்ணைசூடேரும்போது நசுக்கிய பூண்டை கொஞ்சம் கொஞ்சமாக கலக்கவும் அதிகமாக போட்டால் எண்ணை பொங்கி விடும் பிறகுவசம்பு சுக்கு பொட்டு கிளரவும் போட்ட மருந்து கருப்பு நிறமடைந்ததும் இறக்கவும் இதை காலை மாலை அரை டம்ளர் பாலில் சிறுவருக்கு 5சொட்டு பெரியவர்களுக்கு 10 சொட்டு சாப்பிட தரவும் இந்த  எண்ணையை சாப்பிட ஆரம்பைத்தவுடன் வலிப்பு நிற்கும் 48 நாள் தரவும் பத்தியம் குளிக்க மற்றும் குடிக்க வெந்நீர் அசைவ உணவு தவிர்க்கவும் இம் மருந்து குழந்தைகளின் மார்பு சளியை நீக்கும்

Thursday, March 17, 2016

குடல் புழுக்கள் நீங்க

குடல் புழுக்கள் நீங்கி குடல் தூய்மை ஆக
மாதுளம் பழத்தை இரவில் படுக்கப் போகும் முன்  சாப்பிட்டு வருவதால் குடல் புழுக்கள் நீங்கி குடல் தூய்மையாகும்.

நன்றி:-
ஆன்மீக ஜோதிட மருத்துவ அணி

வேலு சசி: குப்பைமேனி வேர் சூரணம் குடல் புழுவை நீக்கும்.
            ஐயா தேவேந்திரன் அவர்கள்

Wednesday, March 16, 2016

கர்ப்பம் தரிப்பதிற்க்கான வைத்தியம்

கர்ப்பம் தரிப்பதிற்க்கான வைத்தியம்
கொச்சைக் காயிலையுடன் கொஞ்சம் மிளகும்,பூண்டும் சேர்த்தரைத்துத் தின்னலாம். அல்லது முன்விழுதில் ஆமணக்கெண்ணெய் விட்டுக் குடித்தாலும் கர்ப்பமுண்டாகும்.
பத்தியம் உண்டாகும்

அனைத்து இருமல் நோய்களுக்கும் பஞ்ச தீபாக்கினி சூரணம் !!!

அனைத்து இருமல் நோய்களுக்கும் பஞ்ச தீபாக்கினி சூரணம் !!!

சுக்கு ................. இரண்டு துண்டுகள்
மிளகு .......................ஒரு தேக்கரண்டி
திப்பிலி ............... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் ............. ஒரு தேக்கரண்டி
சீரகம் ............... ஒரு தேக்கரண்டி
நாட்டுப் பசு நெய் ,......தேவைக்கு

அனைத்துப் பொருட்களையும்
தனித்தனியே
நாட்டுப் பசு நெய்யில்
பொன்னிறமாக வறுத்து
மொத்தமாக சேர்த்து
நன்கு அரைத்து
சூரணமாக செய்து கொள்ளவும்

இந்த சூரணத்திற்குப் பெயர் பஞ்ச தீபாக்கினி சூரணம் ஆகும்

வறட்டு இருமல்
தொடர் இருமல்
கக்குவான் இருமல்
சளி இருமல்
போன்ற அனைத்து வகை இருமல் நோய்களும் நீங்க
இந்த சூரணத்தை சாப்பிட வேண்டிய முறை

பெரியவர்கள்
இந்த பஞ்ச தீபாக்கிணி சூரணத்தில்
ஒரு தேக்கரண்டி எடுத்து
நாட்டுப் பசு நெய்யில் சேர்த்துக் குழைத்து
காலை மாலை
தினம் இருவேளை
வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வர
மூன்று நாட்களில் பரிபூரண குணம் அடைவார்கள்

சிறுவர்களுக்கு
அரை தேக்கரண்டி பஞ்ச தீபாக்கினி சூரணத்தைத்
தேனில் குழப்பி
உணவுக்கு முன்
காலை மட்டும்
இரண்டு நாட்கள் கொடுத்து வர
பரிபூரண குணமாகும்

பச்சிளம் குழந்தைகளுக்கு
இந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை
ஒரு சிட்டிகை அளவு
தேனில் குழைத்து
நாக்கில் தடவ
நோய் சரியாகும்

அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கத்தில்
இந்த சூரணம்
பன்னிரெண்டு நோய்களைத் தீர்க்கும்
என குறிப்பிடப் பட்டுள்ளது

இது ஒரு சரியாக எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

தகவல் நன்றி :-- திரு,பொன் தங்கராஜ்

சீரகத்தின் பயன்கள்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து..

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

*சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும.

மருத்துவ குறிப்பு

1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.

5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.

6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.

8. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.

9. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

10. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.

11. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்

.

வாய்புண்களை குணமாக்கும் மாம்பூ கசாயம்..!

வாய்புண்களை குணமாக்கும் மாம்பூ கசாயம்..!

முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.

தொண்டை வலி குணமடையும்

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.

மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்

மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்

கொசுத்தொல்லை நீங்க

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.

Monday, March 14, 2016

மன்மத லோக செந்தூரம்

அனுபோக வைத்திய நவநீதம் பாகம் -1.
மன்மத லோக செந்தூரம்.
தூய்மை செய்த அரப்பொடி
4 பலம்.(140 கிராம் ),
தூய்மை செய்த செம்மண் பூநாகம் 4 பலம்.(140 கிராம் ),
இவை இரண்டையும் ஆறு மணி நேரம் கைவிடாமல் அரைத்து ஒரு ஓட்டில் பரப்பி வைத்து மேலோடு மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 5 அடி சதுரப்புடம் போடவும்.புடம் ஆறியபின் மருந்தை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து முன்போல் 4 பலம் (140),தூய்மை செய்த பூநாகத்தைச் சேர்த்து 6 மணி நேரம் முன்போல் ஒரு ஓட்டில் பரப்பி வைத்து மேலோடு மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 5 அடி சதுரப்புடம் போடவும்.புடம் ஆறியபின் மருந்தை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து மறுபடியும் முன்போல் புடமிடவும் இப்படி 16 முறை
17 வது புடத்தில் பூநாகத்தை சேர்க்காமல் தனியே செந்துரத்தை மட்டும் கல்வத்திலிட்டு புளிப்பு மாதுளம் பழச்சாற்றை சிறுக சிறுக விட்டு 4 சாமம் (12மணி நேரம்) அரைத்து,சிறு பில்லைகளாகத் தட்டி வெயிலில் வைத்து நன்றாய் உலர்த்தி ஓட்டிலிட்டு மேலோடு மூடி ஏழு சீலைமண் செய்து ஈரமில்லாமல் உலர்த்தி இரண்டடி சதுர புடம் முன் போலிடவும்.இதில் பூநாகத்தின் தாமிரமுஞ் சேர்ந்து செந்துரமாகிக்கொ
ண்டு வருகிற படியால் பூநாகத்திலுள்ள தாமிரத்துக்குத் தகுந்தபடி செந்ததூரமானது சுமார் 5 பலம் (175 கிராம் ) முதல் 6 பலம் (210 கிராம் ) வரையிலிருக்கும்
.இது ஒரு அருமையான சிறந்த செந்தூரம்.
சாப்பிடும் அளவு : 2 முதல் 3 குன்றி மணி எடை.
துணை மருந்து : வாதுமை அல்வா,தேன் ,நெய்,பாலேடு,வெ
ண்ணெய்,ஆகியவை,போன்ற சத்துள்ள இளகம்.முதலியவைக
ளாம்.இச் செந்துரத்தை உட்கொண்டவுடன் காச்சிய கற்கண்டிட்ட,பசுவின் பால் செரித்தல் திறனுக்கு ஏற்றவாறு ஒரு ஆழாக்கு வரையில் பருக வேண்டும்.
பயன்கள் : உடலில் நல்ல ரத்த முண்டாகி நரம்புகள் முறுக்கேறி உடல்வன்மை ஆண்மை சத்து ,உடல் சக்தி முதலியவைகள் அதிகரித்து வயோதிகநிலை போய் இளமை உண்டாகும்.இதன் பெருமையை இதை உண்டு அனுபவித்து வருகிறவர்கள் தாமே தெரிந்துக்கொள்ளக் கூடும்.ஒரு கற்ப மருந்துக்குச் சமமானது.இதனை ஒரு வருடத்தில் மூன்று மண்டலம் உண்டுவந்தால்,எவ்வித நோயும் அணுகாமல் வச்சிர உடலுடையவர்களாக இருக்கலாம்.

திரிகடுகம் நன்மைகள்

சமயசஞ்சீவி திரிகடுகம் நன்மைகள் :-
++++++++++++++++++++++++++++++++++

திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக, அனுபானமாக பயன்படுத்துவது உண்டு. திரிகடுகம் சிறந்த கார்ப்புள்ளது. நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும்.

இனப்பெருக்க உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும், கரு முட்டை வெடித்தல் குறைபாடுள்ள பெண்களுக்கு நல்லது. மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிகக் கொழுப்பு சத்துள்ள நோயாளிகள், உடல் வீக்கம், வளர்சிதை மாற்றமுள்ள நோயாளிகளுக்கு இது தக்க துணைமருந்துகளோடு நன்றாக வேலை செய்யும். பல பற்ப, செந்தூரங்களைக் கொடுக்கும்போது, திரிகடுகம் மூல மருந்து சூரணமாகப் பயன்படுத்தலாம்.

சுக்கின் மகிமை

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும். சௌபாக்ய சுண்டி என்ற மருந்து இதனால் செய்யப்படுகிறது. இது ருசியை அதிகரிக்கும், இலகு குணம் உடையது, மலத்தைப் பிரிப்பது. இதனால் செய்யப்பட்ட நெய், கிரஹணி ரோகத்தை மாற்றும். சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும். சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குறைக்கும்.

வில்வத்துடன் சேர்த்துக் காய்ச்சினால் வாந்தியைப் போக்கும். சுக்கும், வெல்லமும், எள்ளும் இடித்துச் சாப்பிட மாதவிடாய் வலி மாறும். சுக்கை ஆயுர்வேதம் 'மஹெளஷதம்' என்று குறிப்பிடுகிறது. மருந்துகளில் உத்தமமானது சுக்கு என்று இதற்கு அர்த்தம். இஞ்சியை நன்கு காய வைத்தால், கிடைப்பதே சுக்கு.

குழந்தைகளுக்குச் சுக்கு நல்ல மருந்து. கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றில் ஒன்றிரண்டுடன் சுக்கை அரைத்து மருந்தாகப் புகட்டுவார்கள்.

பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டலைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.

`சுக்குக்குப் புறமே நஞ்சு, கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு' என்பது பழமொழி. அதனால் சுக்கை மேல் தோல் நீக்கியே, மருந்து தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். பல் வலிக்கு - சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும்.

இரண்டு ஸ்பூன் சுக்குப் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, மூன்று வேளை ஆறு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் வயிற்றுவலி, பொருமல், பேதி, குல்மம், குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும்.

சுக்கு, சீரகம், கொத்தமல்லி விதை மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து, இரண்டு ஸ்பூன் தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்துத் தாகம் எடுக்கும் போதெல்லாம் அருந்தலாம். குடிநீரையும் வீட்டில் தூய்மை செய்யும் முறை இது.

வயிற்றுப்போக்கை நீக்க 10 கிராம் சுக்கை அரைத்து, புளித்த மோரில் களியாகக் கிளறி மூன்று வேளை வீதம், மூன்று நாட்கள் உட்கொள்ள வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

சுக்கைத் தட்டி போட்டு வெந்நீர் தயார் செய்து குளிக்கத் தலையில் நீர்க்கோர்வை தலைவலி, முகநரம்புவேக்காளம் தீரும். ஜலதோஷத்துக்கு நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. இஞ்சி சாற்றைப் பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும், உடல் இளைக்கும்.

ஒவ்வொரு நாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக்கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் காக்கும். இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், புதிய அடைப்பு உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும். அதன் மேல் தோல் நஞ்சாகும். அதேபோல் சுக்கைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் சுண்ணாம்பைத் தடவிக் காயவைத்து நெருப்பில் சுட்டு, பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் பயன்படுத்த வேண்டாம்.

இஞ்சியைச் சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவுக்குச் சேர்த்து நான்கு நாள் கழித்துத் தினசரி ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்துக்குச் சாப்பிட்டுவரலாம். அப்போது உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

மிளகு

மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தொண்டை வலிக்குத் தேனுடன் கொடுப்பார்கள். இது வாயு வருவதைத் தடுக்கும். தலைவலிக்கு இதை அரைத்துப் பற்று போடலாம். சில வறண்ட தோல் நோய்களுக்கு, மிளகுத் தைலம் சிறந்தது. இது பித்தத்தை அதிகரிக்கும். கபத்தைக் குறைக்கும். சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். வெயில் காலத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம். வயிற்றுப் புண், குடல் புண் உடையவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம். உஷ்ண வீரியமானது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மரிசாதி தைலம், தாளிஸாதி சூரணம் போன்றவற்றில் எல்லாம் இது சேருகிறது.

மிளகுச் சூரணத்தைத் தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்துக் கொடுத்தால் காசத்துக்குச் சிறந்தது. மிளகுச் சூரணத்தை மோர் அல்லது தயிருடன் சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுப் போக்குக்கு நல்லது. மிளகுச் சூரணம், சீரகம் மற்றும் தேனுடன் தினமும் இரண்டு வேளை எடுத்துக்கொள்வது மூல நோய்க்குச் சிறந்த சிகிச்சை.

பல் நோய்களுக்கு மிளகுச் சூரணத்தை லவங்கத்துடன் சேர்த்து வைக்கலாம். மிளகுச் சூரணத்தை உணவுடன் எடுத்துக்கொள்வதால் அது சிரைகளிலும், தமனிகளிலும் ரத்த ஓட்டத் தடை ஏற்படாமல் தடுக்கும். இது ரத்தஉறைதலையும் கட்டுப்படுத்தும்.

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே "பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்" என்றார்கள் முன்னோர்கள்.

மிளகின் வெளிப்புறக் கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே, மிளகு கலந்த உணவைச் சாப்பிட்டு வருவதன் மூலம் எடையைக் குறைக்கலாம்.

ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய், இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும், ஆரம்பக்கட்டப் பிரச்சினையை எதிர்த்துச் செயல்படும்.

சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளைக்கு அரை ஸ்பூன் சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சிலருக்குத் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாவதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்துவர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம்புல்லையும், பத்து மிளகையும் இடித்துத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்திவந்தால், விஷக்கடிகள் முறிந்துவிடும்.

மிளகை ஒரு ஸ்பூன் எடுத்துப் பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்துச் சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட்டால் தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையைச் சுவாசித்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடிபோல் மூக்கில் உறிஞ்சினாலும் தலைவலி தீரும்.

திப்பிலி

திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர். `கணா' என்றும் சொல்வது உண்டு. உலர்ந்தால் உஷ்ணவீர்யமாக மாறும். இருமல், சளி, கபம், அதிகரித்த மூட்டு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்தது.

இதனைப் பத்து பத்தாகக் கூட்டிக் குறைக்கும் முறை உண்டு. இதற்குத் திப்பிலி வர்த்தமானப் பிரயோகம் என்று பெயர். பழங்காலத்தில் இவ்வாறு செய்கிறபோது, செம்மறி ஆட்டுப் பாலைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

திப்பிலி ரசாயனம் இருமல், சளிக்கு ஒரு சிறந்த மருந்து. இதனால் செய்யப்படும் தைலம் மூல நோய்களுக்கும், குடலில் வாயு சேர்ந்த நிலைகளிலும், வஸ்தி (எனிமா) செய்யவும் பயன்படுகிறது. இதை 15 நாட்களுக்கு மேல் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.

திப்பிலியின் காய்களில் வெற்றிலை போன்ற காரத்தன்மை அடங்கியுள்ளதால் வாசனை இருக்கும். கருமிளகைக் காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்திருக்கும். மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்த இது `பைப்பர் லாங்கம்' (Piper longum) என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவர இருமல், தொண்டை கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் போட்டுச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து, அதே அளவு சர்க்கரை கூட்டி ஐந்து கிராம் அளவு இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.

திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை ஐந்து கிராம் சேர்த்துப் பொடியாக்கிக் கழுநீரில் ஐந்து கிராம் போட்டு ஏழு நாளைக்குக் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.

திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சமஅளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இரண்டு வேளை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டுவர, இளைப்பு நோய் குணமாகும்.

முகநூலில்  கடலூர் அரங்கநாதன்...

தலைவலி நீங்க

தலை வலி நீங்க
பச்சைக் குத்துக் கடலையை வெந்நீர் விட்டு அரைத்து நெற்றிப் பொட்டுகளில் தடவ, தலைவலி உடனே நீங்கும்.
பிள்ளைப் பாலையும் நெற்றியில் தடவலாம்.

கொசுத் தொல்லைக்கு

கொசுத் தொல்லைக்கு

பால் சாம்பிராணி-1/2 பலம்
செஞ்சந்தனம்-1/2பலம்
சந்தனத்தூள்-1/2பலம்
வசம்பு-1/2பலம்
அதிமதுரம்-1/2பலம்
கடுகு ரோகிணி-1/2பலம்
ஜடாமஞ்சரி-1/2பலம்
கருங்குங்கிலியம்-1/2பலம்
பூண்டுத்தோல்-1/2பலம்
தேவாரம்-1/2பலம்
கோஷ்டம்-1/2பலம்

இவைகளை தனித்தனியாக இடித்துத் தூள் செய்து,பிறகு ஒன்றாய்க் கலந்து ,தகர பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் நெருப்பில் சாம்பிராணி போடுவது போலப் போட்டு வீட்டில் புகையடையச் செய்யுங்கள். சுவரிலுள்ள ஈர வாடை, கொசு, கிருமி முதலிய விஷப் பூச்சிகள் ஒழியும். இப்புகையின் வாடை இக்காலத்தில் பெரியவர் களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் தேவை. இவை எல்லாத் தமிழ் மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி நீங்க
விளாம் பிசினைக் கொண்டு வந்து பசும் பாலில் ஊற வைத்து, சிறிது சர்க்கரை கலந்து கொட்டைப்பாக்களவு நாள்தோறும் சாப்பிட்டு வர, பலக்குறைவு, களைப்பு,நரம்பு தளர்ச்சி, முதலியவைகள் விலகி இரத்த ஒட்டமும்,வலிவும் உண்டாகும்

Saturday, March 12, 2016

மூல நோய் குறைய

குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். பின்பு அரிசித்திப்பிலியை வறுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் ஒன்றாய் கலந்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த சூரணத்தை தினமும் காலை, மாலை மூன்று கிராம் வீதம் வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூல நோய் குறையும்.

இடது பக்க தோள் அடிக்கடி வீங்கி வலிப்பதற்கு மருத்துவம்

‪+91 97896 14911‬:இடது பக்க தோள் அடிக்கடி வீங்கி வலிக்கிறது.
காரணம்?
மருந்து?
கூற இயலுமா
அ கதிரேசன்: வில்வயிலை 1 பங்கு, சீரகம்  1/4 பங்கு இரண்டையும். நன்கு அரைத்து காலை வெறும் வயிற்றில் மோரில் கலந்து சாப்பிடவும்.

மூட்டு தேய்மானத்திற்கு

தினா: ஐயா எனக்கு  29. வயது .   எனக்கு  மூட்டு தேய்ந்துவிட்டது. ஆப்ரேஷன் பண்ண சொல்லீட்டாங்க...  சித்த முறையில் ஏதேனும் வழி முறை இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா..
அ கதிரேசன்: கண்டிப்பாக உள்ளது ஐயா சில சத்து குறைவினாலயே இது ஏற்படுகிறது ஐயா.
தினா: ஐயா எந்த மாதிரியான உணவை எடுத்து கொள்வது
அ கதிரேசன்: பிரண்டை., கருணை, போன்ற உணவும்   வாயு பதார்த்தம் என்று சொல்லும் உணவுகளைதவிருங்கள் ஐயா.
தினா: நன்றி ஐயா... மூட்டு தேய்மானத்திற்கு இது மட்டும் போதுமா ஐயா.. மேற்படி வேறு ஏதும் வழிகள் இருக்கின்றதா ஐயா.
Dr. sivakarthi: ஐயா 29 வயதுக்கு எல்லாம் தேய்மானம் வராது அது போக தேய்மானம் என்று ஒன்று இல்லவே இல்லை சத்து குறைபாடு தான்

பொடுதலை கீரை கேள்விபட்டிருக்கிறீர்களா?

கிராமங்களில் அதிகம் காணப்படும் இந்த கீரை தரையோடு படர்ந்திருக்கும்.  ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரை காணப்படும்.  இது வெப்பத்தன்மை கொண்டது.  இதன் இலை, வேர் மருத்துவ பயன் கொண்டது.  ஒற்றைத்தலைவலி நீங்க, இந்த கீரையை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.  இருமல் பாதிப்புள்ளவர்கள், இலையை பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.  நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு, இந்த கீரை சிறந்த மருந்தாகிறது.  இந்த கீரையை பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் வீட்டு வதக்கு சட்னி செய்து சாப்பிட்டால், இந்நோயின் தாக்கம் விரைவில் குறையும்.  உடல் சூட்டால் உயலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக மாறும்.  இது உடலில் எரிச்சலை உண்டாக்கும்.  இதற்கு பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து கட்டிகள் மேல் தடவினால், எரிச்சல் நீங்குவதுடன் கட்டிகள் உடைந்து விரைவில் புண் ஆறும்.  பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.  தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.  இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், கருப்பை வலுப்பெறும்.

நீரிழிவு நோயாளிகளின் உணவு அட்டவணை

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை:

சாப்பிடக் கூடாதது
1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16. சீதாப்பழம்.
17. உலர்ந்த திராட்சை.
18. சேப்பங்கிழங்கு.
19. உருளைக்கிழங்கு.
20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.
அளவோடு சாப்பிடலாம்
1. கம்பு.
2. ஓட்ஸ்.
3. அரிசி.
4. அவல்.
5. இரவை.
6. பார்லி அரிசி
7. சோளம்.
8. மக்காச் சோளம்.
9. கேழ்வரகு.
10. கோதுமை.
11. பாதாம் பருப்பு.
12. முந்திரிப் பருப்பு.
13. வேர்க்கடலை.
14. பிஸ்தா பருப்பு.
15. வால் நட்.
அளவில்லாமல் சாப்பிடலாம்
1. பாகற்காய்
2. சுரைக்காய்.
3. வாழைத்தண்டு.
4. வெள்ளை முள்ளங்கி.
5. தக்காளி.
6. கொத்தவரங்காய்.
7. காராமணி.
8. வெள்ளரிக்காய்
9. அவரைக்காய்.
10. முருங்கைக்காய்.
11. கீரை.
12. கண்டங்கத்திரி.
13. கோவைக்காய்.
14. வெங்காயம்.
15. பூசணிக்காய்.
16. கத்திரிக்காய்.
17. வாழைப்பூ.
18. பீர்க்கங்காய்.
19. பப்பாளிக்காய்.
20. வெண்டைக்காய்.
21. முட்டைக்கோஸ்.
22. நூல்கோல்.
23. கோவிப்பூ.
24. சீமை கத்திரிக்காய்.

பசியைத்தூண்ட

பெருமாள்: எனது மகளுக்கு மூன்று வயதாகிறது உடல் எடை கூட்டுவதற்கு மருந்து கூறவும் ஐயா தேவ்ராஜன்: பறங்கி"பட்டை"சூரணம் காலை மாலை பாலில் சாப்பிட பசியை தூண்டி உடல்"பலம் பெறும்

சைனஸ் தலைவலிக்கு

காளிதாசன்: ஐயா.. சைனஸ் தலைவலி உள்ளது. வலி பொறுக்க முடியாத அளவு உள்ளது. இரண்டு சாரிடான் மாத்திரை எடுத்துக் கொண்டால் மட்டுமே குறைகிறது . தயவு செய்து மருத்துவம் கூறுங்கள் ஐயா.
காளிதாசன்: ஐயா.. என் வயது 41.
அ கதிரேசன்: சைனஸ்க்கு கண்டங்கத்தரி, தூதுவேளை,ஆடாதோடை இலைகளை கசாயம் செய்து., பனங்கல்கண்டு சேர்த்து காலை மாலை குடித்துவர தீரும்.

நெற்றியில் வரும் வேர்க்குரு

வேலு சசி: நெற்றியில் வரும் வேக்குருக்கு மருந்து செல்லுங்களேன்
தேவ்ராஜன்: தக்காளி பழத்தை அரைத்து பற்று போடவும்

Sunday, March 6, 2016

கல்லடைப்பு,அல்சருக்கு

ஆறுமுகம்: கதிரேசன் அய்யா கல்லடப்புக்கு தக்க மருந்து கூறவும் வயிற்று புண்(ulcer) வும் உள்ளது வயது 23
அ கதிரேசன்: ஆண் பனைமர பாளை வாழைச்சருகு இரண்டையும் சாம்பலாக்கி இளநீரில் குடித்து வர வையிற்றுப்புண், கல்லடைப்பு குணமாகும்.ஐயா.

ஒற்றைத் தலைவலிக்கு

செயக்குமார்: கதிரேசன் ஐயா வணக்கம், ஒற்றை தலை வலிக்கு மருந்து கூறுங்கள்
அ கதிரேசன்: அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் கல்யாணராமநாதபுரம்
தலைவலிக்கு தைலம் : இஞ்சி., சீரகம்., மிளகு., அதிமதுரம்.,எட்டிவிதை., வகைக்கு 50 கிராம்,(எட்டிவிதையை மட்டும் நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.) மற்ற மருந்துகளை இடித்து நல்லெண்ணெய்யில்(1/2 லிட்டர்) எல்லாவற்றையும் கலந்து பதமாக காய்ச்சிக் கொள்ளவும். வடித்து சீசாவில் வைத்துக்கொண்டு வாரம் இருமுறை காலையில் தலைக்கு தேய்த்து மாலைய்யில் வெண்ணீரில் தலை முழுகவும். பகலில் தூங்க க் கூடாது. பழையசோறு, மோர், தயிர்., போன்றவற்றை தவிர்கவும். தீரும் நோய்கள் : தலைவலி, ஒருபக்க தலைவலி, தலைபாரம், பிடரிவலி, கண்ணெரிச்சல், கண்ணில் நீர் வடிதல், மேலும் வலி, வீக்கம் உள்ள இடங்களில் இத்தைலத்தை பூச வலிகள், மூட்டுவலிகள், வாதசம்மந்த நோய்கள் தீரும். அனுபவமுறையாகும். 9865070850 ;9943850856 ;

பித்த வெடிப்புக்கு

கார்த்திசெல்: பித்தவெடிப்புக்கு தக்க மருந்து கூறுங்களேன்
அ கதிரேசன்: அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் கல்யாணராமநாதபுரம்
பித்த சூரணம் : சுக்கு,மிளகு.,அரிசி திப்பிலி,ஓமம், பெருங்காயம் , பெருங்காயத்தை நல்லெண்ணெய்யில் போட்டு பொறித்துக்கொள்ளவும். மற்றச் சரக்குகளை நன்கு காயவைத்து இடித்து துணியில் சலித்துக்கொள்ளவும். மேற்கண்ட மருந்துகள் சமஅளவாககலந்து கொள்ளவும், 1/4 டீஸ்பூன் அளவு எடுத்து எலுமிச்சம் பழத்தை ஊறுகாய் பேல் அரிந்து அதற்குள் மேற்படி மருந்தை வைத்து இரவில் பனியில் வைத்து காலையில் பிழிந்து சாப்பிடவும். பிறகு இஞ்சியை மேல்தோல் நீக்கி நைத்து கசாயம் வைத்து சாப்பிடவும் இதுபோல 3அல்லது 5அல்லது 7 நாள் சாப்பிடவும். தீரும் நோய்கள் : பித்தம்., மயக்கம்., தலைசுற்றல்., பசியின்மை, செறிமானக்கோளாறு, நெஞ்செரிவு, வாய் நீரூரல்,புளித்த யேப்பம், பித்த வாயு,ஓக்காளம்,போன்றவை தீரும். இது எமது அனுபவ முறையாகும். தொடர்புக்கு. 9865070850, 9943850856.
அ கதிரேசன்: இந்த மருந்தை சாப்பிட்டு வரவும், பிறகு விளக்கெண்ணெய்யும் சுண்ணாம்பும் கலந்து காலில் பூசிவர பித்த வெடிப்பு இருந்த இடமே தெரியாது ஐயா.

உள்ளங்கை வியர்வைக்கு

சதீஸ்குமார்: உள்ளங்களில் வேர்வைக்கு மருந்து கூறுங்கள் ஐயா
அ கதிரேசன்: அண்டோட்டு சுண்ணம் (கோழிமுட்டை ஓட்டு சுண்ணம்) காலை, மாலை சுண்டைக்காய் அளவு நெய்யில் சாப்பிடவும். ஐயா.

சிறுபீளை மூலிகை செடியின் மருத்துவ குணங்கள்

சிறு நீரகக்கல் பிரச்சனையா?
கவலை வேண்டாம். இதை பொருமையுடன் படியுங்கள். நல்ல
மனதிருந்தால் Share செய்யுங்கள்.!
சிறு நீரகக்கல் இருந்தவர்கள் வலி தாங்க முடியாமல் டாக்டர் இடம் சென்றிருப்பீர்கள் ! அவரும் எல்லா சோதனைகளும் முடித்து மருந்துகள் கொடுப்பார் பிறகு மீண்டும் வலி வரும் மீண்டும் சோதித்து ஆபரேஷன் தான் வழி என்றும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு வைப்பார்.
நீங்களும் வேறு வழியின்றி வலி தாங்காமல் ஆபரேஷன் செய்து பணத்தை கட்டி அழுவீர்கள்!
ஆனால் சிறு நீரகக்கல் பிரச்சனை மீண்டும் மீண்டும் வரும்
எத்தனை முறை டாக்டர் இடம் பணத்தை கொட்டி அழுவது?
சரி இனி விசயத்திற்கு வருகிறேன்,
சிறு பீளைச்செடி........
இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!
இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!
ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும்.
மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
சாப்பிடும் முறை: இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!
இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.
மற்றொரு சாப்பிடும் முறை: இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml
பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
இதை உட்கொள்ளும் போது மருந்து
வேளை செய்தால் சிலருக்கு
வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
இம்மூலிகை மருந்தை நான் சுமார் 70 பேருக்கும் மேலாக எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த செடி எனது ஊரில் நிறைய விளைந்து கிடக்கிறது.இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.
இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம்
நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறு நீரகக்கல் வந்தவர்கள்
ஆபரேஷன் செய்திருப்பினும்
மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நாக்குப் புண்ணிற்கு

பத்மா: நாக்கில் வேர்கூரு போன்று பொறி பொறியாக உள்ளது. சூடாக எதையும் சாப்பிட முடியவில்லை. ஏதேனும் மருந்து சொல்லுங்க ஐயா.
அ கதிரேசன்: திரிபலா.சூரணம்  (கடுக்காய்.,தான்றிக்காய், நெல்லிக்காய் ) காலை, மாலை தேன் அல்லது நெய்யில் சாப்பிட குணாமாகும்.
அ கதிரேசன்: அளவு சுண்டைக்காய் அளவு.
பத்மா: பொடி செய்து சாப்பிட வேண்டுமா ஐயா.
அ.கதிரேசன்: ஆம்

Saturday, March 5, 2016

சூதக வியாதிக்கு

அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் கல்யாணராமநாதபுரம்
சூதக வியாதிக்கு :
வாழைச்சருகுச் சுட்டச் சாம்பல் 35 கிராம், சுக்கு சுட்டச் சாம்பல் 8கிராம், பனங்கருப்பட்டி 8 கிராம், இவற்றை எல்லாம் சேர்த்து அரைக்க மெழுகு பதம் வரும்., எடுத்து வைத்துக் கொண்டு, 3 நாட்கள்., காலை மாலை சுண்டைக்காய் அளவு சாப்பிடவும்., தீரும் நோய்கள் : சூதகக் கட்டு, சூதக வலி, நீர்கட்டிகள், மற்றும் கற்பபை சம்மந்த கோளாறுகள் தீரும். இதுவும் பாரம்பரிய முறை ஆகும். தொடர்புக்கு, 9865070850 ; 9943850856. மேலும்., மேல்பூச்சு மருந்து வைக்கோல் அல்லது மூங்கில் இலையை காயவைத்து சாம்பலாக்கி நெய்யில் கலந்து அடிவயிற்றில் பூசிவர மேற்கண்ட நோய்கள் குணமாகும். நம்பிக்கையுடன் செய்யலாம்.

Friday, March 4, 2016

ஆண்மை விருத்திக்கு

கருவேலம் பிசின் இரண்டு பலம், சுக்கு, சர்க்கரை, பேரீச்சம் பழம், வெந்தயம், கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றில் வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்து, அவற்றை ஒன்று சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து எடுத்துக் கொள்ளவேண்டும் (இதுவே சூரணம் எனப்படும்). பிறகு ஒரு மண் பானையில் எட்டு பலம் பனைவெல்லத்தையும் இட்டு அடுப்பில் வைத்து எரிக்க பனைவெல்லம் உருகி பாகு பத்தில் வரும். அப்போது முன்னர் சலித்து எடுத்து வைத்த சூரணத்தை சிறிது சிறிதாக பானையில் போட்டு கிண்ட வேண்டும்.
அது சற்று இறுகிய நிலையில் வந்ததும் அதனுடன் பசுவின் நெய் நான்கு பலம் விட்டுக் கிண்டி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து, சேமித்துக் கொள்ளவேண்டும். இதுவே தேரையர் அருளிய தாது புஷ்டி லேகியம்.இந்த தாதுபுஷ்டி லேகியத்தில் எலுமிச்சம் காய் அளவுக்கு எடுத்து காலை மாலை என்று இரு வேளையாக, தொடர்ந்து இருபத்தி நான்கு நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்
இதனால் தாதுபுஷ்டி உண்டாகும். அது தவிர கிரந்தி, வெள்ளை, இடுப்பு நோய் போன்றவைகளும் குணமாகும். பத்தியமாக சாதத்தில் நெய், வெல்லம் சேர்த்து சாப்பிடவும். புளியையும், பெண் சேர்க்கையும் மருந்துண்ணும் நாட்களில் இருந்து நாற்பத்தெட்டு நாட்கள் நீக்கிவிடவேண்டும்

பல் கூச்சத்திற்கு

பத்மா: பல் கூச்சதிற்ககு மருந்து சொல்லுங்க ஐயா

வேலு சசி: நாயுருவி வேரினாலோ குச்சியாலோ பல்துலக்கி வரவும்

பல் கூச்சத்திற்கு பிரஸ்ஸால் பல் துலக்கிய பின்பு விரலால் மூலிகை பல்பொடியை கொண்டு தேய்த்து விடவும்

நாயுருவி  குச்சியினால் பல்துலக்குவது மிக்க நலம்.
பல்துலக்கிய குச்சியை வீணாக்காமல் சேகரித்து வைத்து அதை பொடியாக்கியும் பல்துலக்கலாம்
தொடர்ந்து நாயுருவி வேரினால் பல் துலக்கி வர முக கடாட்சம் உண்டாகும்
இது அனுபவம்

மு.முருகன்
சிவகங்கை

தலை முடி உதிர்வுக்கு

குருநாத்: ஐயா  தலை முடி உதிர்வை தடுக்க வழி கூறுங்கள்.
உடல் உஷ்ணத்திற்கு  வாரம் இரு முறை நல்லெண்ணை தேய்த்து சுடு தண்ணீரில் குளிக்கவும்

முடியாத பட்சத்தில் இரவு படுக்க போகும் முன் ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்
குருநாத்: ஐயா எனக்கு ஆஸ்துமா  இருப்பதால் வெந்தயம் தேய்த்து குளிப்பது ஆஹாது.இருமல் வந்து விடும்.

கண்டிப்பாக உடல் குளிர்ச்சியடைவது ஆகாது

பதில்: தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுத்தமான தேங்காய் எண்ணையை பயன்படுத்துங்கள்
சீயக்காய் தலையில் தேய்த்து குளியுங்கள்
இரும்பு சத்துள்ள பதார்த்தங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தலைகுளித்து துவட்டும் போது அழுத்தி துவட்ட வேண்டாம்.நன்றாக தலை காய்ந்த பின்பு எண்ணை தடவுங்கள்

மு.முருகன்
சிவகங்கை

கொட்டை கரந்தை மூலிகையின் மருத்துவ பயன்கள்

இதன் மருத்துவப்பயன்கள்: கொட்டைக்கரந்தை மலமிளக்கியாகவும், ஆண்களுக்குத் தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். கற்பப்பையில் வலி, இரத்த சோகை, நுரையீரல் நோய், யானைக்கால் வியாதி, மூலம், இருமல், ஆசுத்துமா, மூச்சிறைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, பெருகுடல் வலி, வாந்தி, விரைவீக்கம் நோய், பைத்தியம், மூத்திரப்போக்கு, பெண்களுக்குக் கொங்கை தளர்ந்து தொங்குதல் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். இருதய நோய் குணமாகும். வண்டுக்கடிக்கும் இது மருந்தாகப் பயன்படும். இதன் வேரில் எண்ணெய் எடுத்து, உடம்பின் மேல் பூசிவர, Scrofula எனப்படும் கண்டமாலை குணமாகும். இதன் பூ கண் பார்வையை அதிகப்படுத்தும். தோல் வியாதிகூடக் குணமாக்கும். இதன் விதை மற்றும் வேரின் பொடி குடற் புழுவை அழிக்கும் வல்லமை பொருந்தியது.
பூவிடாத நிலையிலுள்ள கொட்டக்கரந்தை செடியைப் பிடுங்கி நிழலில் உலர்த்திப் பொடி செய்துவைத்துக்கொண்டு, 5 கிராம் பொடியுடன் சிறிது கற்கண்டுப் பொடியும் கலந்து சாப்பிட்டு வர, வெள்ளைப்படுதல், உள் இரணம், கரப்பான், கிராணி, ஆகியவை குணமடையும். நீடித்துச் சாப்பிட்டு வந்தால் மூளை, இதயம், நரம்பு ஆகியவை வலுப்பெறும். தினமும் 1 முதல் 2 கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுவதுடன் பார்வை கூர்மை அடையும், இளநரை மாறும்.
இப்பொடியுடன் கரிசிலாங்கண்ணி இலையைப் பொடிசெய்து, சம எடை கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இள நரை தீரும். உடலும் வலுப்பெறும்.
கொட்டைக் கரந்தைக்கு ஒழுக்குப் பிரமேகம், வெள்ளை, சினைப்பு, கரப்பான், கிரந்தி ஆகிய நோய்கள் நீங்கும். நீண்டநாள் வெளிவராமல் உள்ளுக்குள்ளேயே தங்கியுள்ள பழைய மலத்தைப் வெளியேற்றும்.
இதனைக் காய் விடுவதற்கு முன் பயன் படுத்தினால் அதிக பலன் தரும். இச்செடியின் பட்டையை அரைத்து, மோரில் கலந்து உட்கொள்ள மூலநோய் குணமாகும். இதன் தழை மற்றும் சமூலம், மூளை, இருதயம், நரம்பு இவைகட்குப் பெரும் வலுவினைக் கொடுக்கும். கசாயமாகக் காய்ச்சி உட்கொள்ளப் பைத்தியம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும். இதன் கசாயத்தோடு சீரகத்தைப் பொடித்துப் போட்டு உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
சித்தநூல்படி, இதன் சமூலத்தின் சாறும், இலையின் சாறும், வாத முறைக்கும் கற்பமுறைக்கும் மிக்க பயனுள்ளதாகும்.
பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைக்கரந்தைச் செடியின் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச் சத்துக்கள் அடங்கியுள்ளன. மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான இம்மினோ குளோபுளின்களை சீர் செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.