பொடுதலை கீரை கேள்விபட்டிருக்கிறீர்களா?
கிராமங்களில் அதிகம் காணப்படும் இந்த கீரை தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரை காணப்படும். இது வெப்பத்தன்மை கொண்டது. இதன் இலை, வேர் மருத்துவ பயன் கொண்டது. ஒற்றைத்தலைவலி நீங்க, இந்த கீரையை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும். இருமல் பாதிப்புள்ளவர்கள், இலையை பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு, இந்த கீரை சிறந்த மருந்தாகிறது. இந்த கீரையை பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் வீட்டு வதக்கு சட்னி செய்து சாப்பிட்டால், இந்நோயின் தாக்கம் விரைவில் குறையும். உடல் சூட்டால் உயலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக மாறும். இது உடலில் எரிச்சலை உண்டாக்கும். இதற்கு பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து கட்டிகள் மேல் தடவினால், எரிச்சல் நீங்குவதுடன் கட்டிகள் உடைந்து விரைவில் புண் ஆறும். பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், கருப்பை வலுப்பெறும்.
No comments:
Post a Comment