அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் கல்யாணராமநாதபுரம்
தூதுவேளை இலேகியம் :
தூதுவேளை சமூலம்.
ஆடாதோடா சமூலம்
கண்டங்கத்தரி சமூலம்
ஆதண்டை சமூலம் வகைக்கு 250 கிராம்,
சுக்கு.,மிளகு.,அரிசி திப்பிலி., அறத்தை,அக்கிரகாரம்.,கோஷ்ட்டம், கருஞ்சீரகம்,நற்சீரகம், நெல்லி வற்றல்., கடுக்காய்., தான்றிக்காய், நெல்ப்பொறி படி கால், இம்புரா வேர் அரைத்தது நார்த்தங்காய் அளவு, எல்லாவற்றையும் கலந்து சட்டியில் பசு நெய் கால் படி விட்டு சூடுயேறியவுடன் சரக்கை சிறிது சிறிதாக தூவி கிண்டிவர மெழுகு பதம் வந்தவுடன் தேன் கால் படி விட்டு கிண்டி இறக்கி வைத்து கொள்ளவும்.
காலை, மாலை, எலந்தப் பழம் அளவு சாப்பிடவும்.
தீரும் நேய்கள் :
சூலை, இருமல்., மந்தாரகாசம், சுவாச காசம், எலிகடி இருமல்.,காய்ச்சல் , கால்,கை. கடுப்பு, வாய்வு.இது முதலாகியதெல்லாம் தீரும். இது எங்கள் குடும்ப அனுப்ப முறையாகும். இதனுடன் காளமேக நாராயணச் செந்தூரம் அரிசியளவு சேர்த்து சாப்பிடலாம் நல்ல குணம் கிடைக்கும். தொடர்புக்கு 9865070850; 9943850856.
Thursday, March 3, 2016
சித்த மருத்துவ அணி இருமலுக்கு வைத்தியம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment