Friday, March 4, 2016

கொட்டை கரந்தை மூலிகையின் மருத்துவ பயன்கள்

இதன் மருத்துவப்பயன்கள்: கொட்டைக்கரந்தை மலமிளக்கியாகவும், ஆண்களுக்குத் தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். கற்பப்பையில் வலி, இரத்த சோகை, நுரையீரல் நோய், யானைக்கால் வியாதி, மூலம், இருமல், ஆசுத்துமா, மூச்சிறைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, பெருகுடல் வலி, வாந்தி, விரைவீக்கம் நோய், பைத்தியம், மூத்திரப்போக்கு, பெண்களுக்குக் கொங்கை தளர்ந்து தொங்குதல் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். இருதய நோய் குணமாகும். வண்டுக்கடிக்கும் இது மருந்தாகப் பயன்படும். இதன் வேரில் எண்ணெய் எடுத்து, உடம்பின் மேல் பூசிவர, Scrofula எனப்படும் கண்டமாலை குணமாகும். இதன் பூ கண் பார்வையை அதிகப்படுத்தும். தோல் வியாதிகூடக் குணமாக்கும். இதன் விதை மற்றும் வேரின் பொடி குடற் புழுவை அழிக்கும் வல்லமை பொருந்தியது.
பூவிடாத நிலையிலுள்ள கொட்டக்கரந்தை செடியைப் பிடுங்கி நிழலில் உலர்த்திப் பொடி செய்துவைத்துக்கொண்டு, 5 கிராம் பொடியுடன் சிறிது கற்கண்டுப் பொடியும் கலந்து சாப்பிட்டு வர, வெள்ளைப்படுதல், உள் இரணம், கரப்பான், கிராணி, ஆகியவை குணமடையும். நீடித்துச் சாப்பிட்டு வந்தால் மூளை, இதயம், நரம்பு ஆகியவை வலுப்பெறும். தினமும் 1 முதல் 2 கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுவதுடன் பார்வை கூர்மை அடையும், இளநரை மாறும்.
இப்பொடியுடன் கரிசிலாங்கண்ணி இலையைப் பொடிசெய்து, சம எடை கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இள நரை தீரும். உடலும் வலுப்பெறும்.
கொட்டைக் கரந்தைக்கு ஒழுக்குப் பிரமேகம், வெள்ளை, சினைப்பு, கரப்பான், கிரந்தி ஆகிய நோய்கள் நீங்கும். நீண்டநாள் வெளிவராமல் உள்ளுக்குள்ளேயே தங்கியுள்ள பழைய மலத்தைப் வெளியேற்றும்.
இதனைக் காய் விடுவதற்கு முன் பயன் படுத்தினால் அதிக பலன் தரும். இச்செடியின் பட்டையை அரைத்து, மோரில் கலந்து உட்கொள்ள மூலநோய் குணமாகும். இதன் தழை மற்றும் சமூலம், மூளை, இருதயம், நரம்பு இவைகட்குப் பெரும் வலுவினைக் கொடுக்கும். கசாயமாகக் காய்ச்சி உட்கொள்ளப் பைத்தியம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும். இதன் கசாயத்தோடு சீரகத்தைப் பொடித்துப் போட்டு உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
சித்தநூல்படி, இதன் சமூலத்தின் சாறும், இலையின் சாறும், வாத முறைக்கும் கற்பமுறைக்கும் மிக்க பயனுள்ளதாகும்.
பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைக்கரந்தைச் செடியின் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச் சத்துக்கள் அடங்கியுள்ளன. மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான இம்மினோ குளோபுளின்களை சீர் செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment