Monday, March 14, 2016

மன்மத லோக செந்தூரம்

அனுபோக வைத்திய நவநீதம் பாகம் -1.
மன்மத லோக செந்தூரம்.
தூய்மை செய்த அரப்பொடி
4 பலம்.(140 கிராம் ),
தூய்மை செய்த செம்மண் பூநாகம் 4 பலம்.(140 கிராம் ),
இவை இரண்டையும் ஆறு மணி நேரம் கைவிடாமல் அரைத்து ஒரு ஓட்டில் பரப்பி வைத்து மேலோடு மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 5 அடி சதுரப்புடம் போடவும்.புடம் ஆறியபின் மருந்தை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து முன்போல் 4 பலம் (140),தூய்மை செய்த பூநாகத்தைச் சேர்த்து 6 மணி நேரம் முன்போல் ஒரு ஓட்டில் பரப்பி வைத்து மேலோடு மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 5 அடி சதுரப்புடம் போடவும்.புடம் ஆறியபின் மருந்தை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து மறுபடியும் முன்போல் புடமிடவும் இப்படி 16 முறை
17 வது புடத்தில் பூநாகத்தை சேர்க்காமல் தனியே செந்துரத்தை மட்டும் கல்வத்திலிட்டு புளிப்பு மாதுளம் பழச்சாற்றை சிறுக சிறுக விட்டு 4 சாமம் (12மணி நேரம்) அரைத்து,சிறு பில்லைகளாகத் தட்டி வெயிலில் வைத்து நன்றாய் உலர்த்தி ஓட்டிலிட்டு மேலோடு மூடி ஏழு சீலைமண் செய்து ஈரமில்லாமல் உலர்த்தி இரண்டடி சதுர புடம் முன் போலிடவும்.இதில் பூநாகத்தின் தாமிரமுஞ் சேர்ந்து செந்துரமாகிக்கொ
ண்டு வருகிற படியால் பூநாகத்திலுள்ள தாமிரத்துக்குத் தகுந்தபடி செந்ததூரமானது சுமார் 5 பலம் (175 கிராம் ) முதல் 6 பலம் (210 கிராம் ) வரையிலிருக்கும்
.இது ஒரு அருமையான சிறந்த செந்தூரம்.
சாப்பிடும் அளவு : 2 முதல் 3 குன்றி மணி எடை.
துணை மருந்து : வாதுமை அல்வா,தேன் ,நெய்,பாலேடு,வெ
ண்ணெய்,ஆகியவை,போன்ற சத்துள்ள இளகம்.முதலியவைக
ளாம்.இச் செந்துரத்தை உட்கொண்டவுடன் காச்சிய கற்கண்டிட்ட,பசுவின் பால் செரித்தல் திறனுக்கு ஏற்றவாறு ஒரு ஆழாக்கு வரையில் பருக வேண்டும்.
பயன்கள் : உடலில் நல்ல ரத்த முண்டாகி நரம்புகள் முறுக்கேறி உடல்வன்மை ஆண்மை சத்து ,உடல் சக்தி முதலியவைகள் அதிகரித்து வயோதிகநிலை போய் இளமை உண்டாகும்.இதன் பெருமையை இதை உண்டு அனுபவித்து வருகிறவர்கள் தாமே தெரிந்துக்கொள்ளக் கூடும்.ஒரு கற்ப மருந்துக்குச் சமமானது.இதனை ஒரு வருடத்தில் மூன்று மண்டலம் உண்டுவந்தால்,எவ்வித நோயும் அணுகாமல் வச்சிர உடலுடையவர்களாக இருக்கலாம்.

No comments:

Post a Comment