மருத்தவர்கள் அல்லாத தமிழ் உறவுகளே! நீங்களும் வைத்தியராகலாம்
இப்பொழுது உடம்பில் அதிக உஷ்ணம்,அசீரணம்,வாயு,பித்தம்,சூலை போன்ற நோய்களை தீர்க்க கூடிய சூரண முறையை சொல்கிறேன் அதன்படி செய்து மருந்து தயார் செய்யுங்கள்
சூரணம் என்றால் பொடியாக்குதல் என்று பெயர்
இந்த சூரணத்தின் பெயர்
பஞ்சதீபாக்னிச் சூரணம்
சுக்கு-100கிராம்
மிளகு-100கிராம்
திப்பிலி-100கிராம்
ஏலம்-100கிராம்
சீரகம்-100கிராம்
சர்க்கரை-100கிராம்
இந்த ஆறு பொருள்களையும் சேகரித்து, முதல் ஐந்து பொருள்களை விறகு அடுப்பில் இளவருப்பாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வறுத்த பொருள்களை இடித்து சலித்து வைத்துக் கொண்டு, பின்பு தனியாக 500கிராம் சர்க்கரையை பொடித்துச் சலித்துக் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அசீரணக் கோளாறுகள் இருந்தாலோ, உடலில் அதிக உஷ்ணம் இருந்தாலோ இந்த மருந்தை தினமும் 1முதல் 2 கிராம் வரை தேன் அல்லது நெய்யுடன் 3 வேளையும் சாப்பிட சொல்லுங்கள்.
மு.முருகன்
சிவகங்கை
No comments:
Post a Comment