Friday, March 4, 2016

ஆண்மை விருத்திக்கு

கருவேலம் பிசின் இரண்டு பலம், சுக்கு, சர்க்கரை, பேரீச்சம் பழம், வெந்தயம், கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றில் வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்து, அவற்றை ஒன்று சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து எடுத்துக் கொள்ளவேண்டும் (இதுவே சூரணம் எனப்படும்). பிறகு ஒரு மண் பானையில் எட்டு பலம் பனைவெல்லத்தையும் இட்டு அடுப்பில் வைத்து எரிக்க பனைவெல்லம் உருகி பாகு பத்தில் வரும். அப்போது முன்னர் சலித்து எடுத்து வைத்த சூரணத்தை சிறிது சிறிதாக பானையில் போட்டு கிண்ட வேண்டும்.
அது சற்று இறுகிய நிலையில் வந்ததும் அதனுடன் பசுவின் நெய் நான்கு பலம் விட்டுக் கிண்டி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து, சேமித்துக் கொள்ளவேண்டும். இதுவே தேரையர் அருளிய தாது புஷ்டி லேகியம்.இந்த தாதுபுஷ்டி லேகியத்தில் எலுமிச்சம் காய் அளவுக்கு எடுத்து காலை மாலை என்று இரு வேளையாக, தொடர்ந்து இருபத்தி நான்கு நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்
இதனால் தாதுபுஷ்டி உண்டாகும். அது தவிர கிரந்தி, வெள்ளை, இடுப்பு நோய் போன்றவைகளும் குணமாகும். பத்தியமாக சாதத்தில் நெய், வெல்லம் சேர்த்து சாப்பிடவும். புளியையும், பெண் சேர்க்கையும் மருந்துண்ணும் நாட்களில் இருந்து நாற்பத்தெட்டு நாட்கள் நீக்கிவிடவேண்டும்

No comments:

Post a Comment